கேரளாவில் இன்று 6,638 பேருக்குக் கரோனா; மீண்டவர்கள் 7,828 பேர்: அரசு தகவல்
கேரளாவில் இன்று 6,638 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்துக் கேரள அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''கேரளாவில் இன்று 6,638 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் 7,828 பேர் இந்த நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 5,789 பேருக்கு உள்ளூர்ப் பரவல் மூலம் நோய்த் தொற்று பரவிய நிலையில், 700 பேருக்குத் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரம் தெரியவில்லை.
இன்று 28 மரணங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,457 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான மரணங்கள் குறித்த விவரம்:
திருவனந்தபுரம் சுப்பிரமணியம் (61), பாபு (72), ராஜம்மா (90), எஸ்தர் (78), ருக்மிணி (58), சுஷிலா (65), ஸ்ரீநாத் (28), கொல்லம் சனாதனன் (82), ஹம்சகுட்டி (81), பத்தனம் திட்டா பிஜு கே நாயர் (45), கோட்டயம் பரீத் ரவுதர் (77), சரசம்மா, ஆலப்புழா கோபாலகிருஷ்ணன் (65), எர்ணாகுளம் பி.கே.அலி (65), பேபி வர்கீஸ் (57), திருச்சூர் பிரபாகரன் (63), உமாதேவி (57) & தேவசி (76), மலப்புரம் பதும்மா (65), ஆயிஷா (84), அபுபாக்கர் சித்திக் (43), கோழிக்கோடு மல்லு (65), குஞ்சிகண்ணன் (65), ராதா (78), அப்துல் ரஹ்மான் (78), பாலமணி (59), வயநாடு ஃபாசியா (29), கண்ணூர் கதீஜா (70).
தொற்று பாதிப்பு (மாவட்ட வாரியான எண்ணிக்கை):
திருச்சூர் 1,096, மலப்புரம் 761, கோழிக்கோடு 722, எர்ணாகுளம் 674, ஆலப்புழா 664, திருவனந்தபுரம் 587, கொல்லம் 482, பாலக்காடு 482, கோட்டயம் 361, கண்ணூர் 341, பத்தனம்திட்டா 163, காசர்கோடு 133, வயநாடு 90 மற்றும் இடுக்கி 76.
தொற்று கண்டறியப்பட்டவர்களில் 85 பேர் வெளிமாநிலத்திற்குப் பயணம் செய்து திரும்பியவர்கள் ஆவர்.
உள்ளூர்ப் பரவலில் தொற்று கண்டவர்களின் மாவட்ட வாரியான விவரம்:
திருச்சூர் 1,080, மலப்புரம் 723, கோழிக்கோடு 698, எர்ணாகுளம் 457, ஆலப்புழா 629, திருவனந்தபுரம் 460, கொல்லம் 474, பாலக்காடு 258, கோட்டயம் 360, கண்ணூர் 251, பத்தனம்திட்டா 131, காசர்கோடு 129, வயநாடு 84, இடுக்கி 55.
மாவட்ட வாரியாக இன்று தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை:
எர்ணாகுளம் 14, கோழிக்கோடு 13, திருவனந்தபுரம் 10, கண்ணூர் 8, திருச்சூர் 7, மலப்புரம் 4, கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் தலா 2, ஆலப்புழா மற்றும் காசர்கோடு தலா 1.
இன்று சோதனையில் நோய்த்தொற்று நீங்கியவர்களின் மாவட்ட வாரியான எண்ணிக்கை:
திருவனந்தபுரம் 715, கொல்லம் 636, பத்தனம்திட்டா 145, ஆலப்புழா 722, கோட்டயம் 1,007, இடுக்கி 105, எர்ணாகுளம் 741, திருச்சூர் 778, பாலக்காடு 286, மலப்புரம் 1,106, கோழிக்கோடு 959, வயநாடு 109, கண்ணூர் 379 மற்றும் காசர்கோடு 140.
தற்போது மாநிலத்தில் 90,565 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 3,32,994 பேர் இதுவரை கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மாநிலத்தில் வீடு அல்லது நிறுவனத் தனிமைப்படுத்துதலின் கீழ் 2,66,953 பேர் மற்றும் மருத்துவமனைகளில் தனிமையில் 21,682 பேர் உள்ளனர். 2,621 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 53,981 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தற்போது வரை மொத்தம் 45,85,050 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆறு புதிய ஹாட்ஸ்பாட்கள் உள்ளன. 10 பகுதிகள் விலக்கப்பட்டுள்ளன. தற்போது, கேரளாவில் 690 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
