

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குஜராத்தில் 76 சதவீத மக்கள் தொகைக்கு தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
குஜராத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் செயல்பாடு குறித்த இடைக்கால அறிக்கை காணொலிக் காட்சி வாயிலாக தேசிய ஜல் ஜீவன் இயக்கத்திடம் இன்று அளிக்கப்பட்டது.
2022- 23 ஆம் ஆண்டுக்குள் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 8 லட்சத்து 50 ஆயிரத்து 871 வீடுகளுக்கு தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது மொத்த இலக்கில் 76.29 சதவீதம் ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் எதிர்கால குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக 100 நாட்களுக்குள் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டத்தை குஜராத்தில் உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்று ஜல் ஜீவன் அமைச்சகம் அந்த மாநிலத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.