Last Updated : 19 May, 2014 01:16 PM

 

Published : 19 May 2014 01:16 PM
Last Updated : 19 May 2014 01:16 PM

உ.பி.யில் முஸ்லிம்கள் அதிகம், ஒரு எம்.பி கூட இல்லை- 55 பேர் போட்டியிட்டும் வாக்குகள் சிதறிவிட்டன

உபியில் அதிகம் வசிக்கும் முஸ்லிம்களில் ஒருவர் கூட எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட வில்லை. சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற நிலை முதன் முறையாக ஏற்பட்டதற்கு, அவர்க ளுடைய வாக்குகள் பிரிந்ததே காரணம் எனக் கருதப்படுகிறது.

முதல் மக்களவை தேர்தல் நடந்த 1952 முதல் இதுவரை உபியில் முஸ்லிம் எம்பிக்கள் இல்லாமல் இருந்தது கிடையாது. ஆனால் இந்தமுறை 55 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டும் ஒருவரால் கூட வெல்ல முடியவில்லை. இதில் அதிகபட்சமாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் 19, முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியில் 13, ஆம் ஆத்மி கட்சியில் 12 மற்றும் காங்கிரஸில் 11 வேட்பாளர்கள் முஸ்லிம்களாக இருந்தனர். பாரதிய ஜனதாவில் ஒரு வேட்பாளர் கூட நிறுத்தப்பட வில்லை.

இதுகுறித்து 'தி இந்து'விடம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க செயலாளரும் இணைப்பேராசிரியருமான அப்தாப் ஆலம் கூறுகையில், ‘‘இதற்கு உபியின் முஸ்லிம் வாக்குகள் பிரிந்ததுதான் காரணம். இதைப் பிரிப்பதில் வழக்கமான கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவற்றுடன் இந்தமுறை புதிதாக ஆம் ஆத்மியும் சேர்ந்து கொண்டது. இதனால் உறுதியாக முஸ்லிம்கள் வெல்லும் ராம்பூர் மற்றும் மொராதாபாத் தொகுதிகளிலும் வாக்குகள் பிரிந்தன’’ எனக் கூறுகிறார்.

எனினும், உபியின் முஸ்லிம் கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்கவில்லை எனவும் இந்தமுறை உபியில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு இடையி லான தேர்தலாக இது மாற்றப்பட்டு விட்டதாகவும் புகார் கூறும் அப்தாப், அரசியல் அறிவியல் துறையில் இணைப்பேராசி ரியராக பணியாற்றுகிறார்.

உபியில், கடந்த 2009 தேர்தலில் முஸ்லிம் எம்பிக்கள் ஏழு பேர் இருந்தனர். ஆனால் இந்தத் தேர்தலில் இரண்டாவது இடம் கூட ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கும் கிடைக்கவில்லை. இம்மாநிலத் தின் மொத்தம் உள்ள 80 தொகுதி களில் சுமார் 25-ல் முஸ்லிம்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக் கும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுவது உண்டு. மேலும் சுமார் 20 தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.

இந்தியாவின் இருதயமாகக் கருதப்படும் உபியில் 19 சதவிகிதம் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இது சதவிகிதத்தில் குறைவாக இருப்பினும் பெரிய மாநிலமான உபியின் எண்ணிக்கையில் அதிகமாகும். எனவே இம்மாநில முஸ்லிம்கள்தான் நாட்டின் முஸ்லிம்கள் பிரச்சனைகளில் முக்கிய முடிவுகள் எடுப்பதாகவும் கருதப்படுகிறது.

இம்மாநிலத்தின் மொத்தம் உள்ள 80 தொகுதி களில் சுமார் 25-ல் முஸ்லிம்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக் கும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுவது உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x