

மிசோரம் மாநிலத்தில் நேற்று பஸ் பள்ளத் தில் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தெற்கு மிசோரமின் லான்கிட்லாய் பகுதியில் இருந்து அய்ஸால் நகருக்கு நேற்றுமுன்தினம் இரவு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
அந்த பஸ் ராம்லாய்டி என்ற பகுதியில் வந்தபோது எதிரே ஒரு லாரி நேருக்கு நேர் வந்தது. லாரி மீது மோதாமல் இருக்க பஸ்ஸை டிரைவர் திருப்பினார். இதில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
இதில் பஸ் டிரைவர் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை மோசமாக உள்ளது. போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பஸ் டிரைவர் மது அருந்தி யிருந்ததாக தெரியவந்துள்ளது. எனவே விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து பயணிகளிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.