Published : 28 Oct 2020 11:18 AM
Last Updated : 28 Oct 2020 11:18 AM

காட்டாட்சிக் கொள்ளை, அரசு அதிகாரிகளின் கொள்ளை; இரண்டுக்கும் பிறகு இப்போது என்ன?- விரக்தியில் பிஹார் மக்கள்

பிஹாரில் மக்கள் புதிய மாற்றத்தை விரும்புகின்றனர், ஆனால் அவர்களுக்கான புதிய வாய்ப்போ, சாத்தியமோ இல்லை என்பதில் விரக்தியடைந்துள்ளனர்.

லாலுவின் காட்டாட்சி முடிந்தது சரி, இவர்கள் வந்து செய்தது என்ன? ஆட்சியதிகாரிகளின் காட்டாட்சிதான், கொள்ளை ஆட்சிதான் என்று அவர்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அதாவது பலப்பிரயோக ஆட்சிக்குப் பதில் பணப்பிரயோக ஆட்சி வந்தது, வேறு என்ன, அடுத்து என்ன? என்கின்றனர் அந்த மாநில மக்கள்.

ரூபாவ்லி மண்டலத்தில் தினக்கூலி உமேஷ் மண்டல் தி இந்து ஆங்கிலம் நாளிதழிடம் கூறியபோது, “கிரிமினல்கள் சாலையில் திரிவதில்லை. இவர்கள் தற்போது அரசு அலுவலகங்களில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். அரசு என்ன கூறுகிறது? எதற்கு சாலையில் முகமூடிக் கொள்ளை அடிக்க வேண்டும், அரசு அலுவலகங்களில் அமர்ந்து கொள்ளை அடிக்கலாமே என்றுதான் அரசு கூறுகிறது” என்று கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.

அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு ஒவ்வொன்றுக்கும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

“இந்திரா ஆவாஸ் யோஜனாவின் கீழ் நீங்கள் வீடு கட்ட வேண்டுமெனில் ரூ.30,000 லஞ்சம் கொடுக்க வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தில் டாய்லெட் கட்ட வேண்டுமென்றால் 2000 அவிழ்க்க வேண்டும். என் வாக்காளர் அட்டையில் பிழை உள்ளது, அதைச் சரி செய்ய ரூ.200 அவுக்க வேண்டும்” என்கிறார் ஒரு வாக்காளர். இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.

பலரும் மோடிக்காக வாக்களிக்கிறோம், நிதிஷ் குமார் எங்களுக்கு வேண்டாம் என்று கூறுகின்றனர்.

அதே போல் லாலு பிரசாத் யாதவ் போல் மகன் தேஜஸ்வி இருக்க வேண்டிய அவசியமில்லை காட்டாட்சி என்பதெல்லாம் பழைய கதை இப்போது மாறிவிட்டது என்று இளைஞர்கள் தரப்பில் தேஜஸ்விக்கு ஓரளவுக்கு ஆதரவு இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x