

கரோனா வைரஸினால் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 45,000த்திற்கும் கீழ் குறைந்தது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 43,893 என்று 45,000த்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிகை 79 லட்சத்து 90 ஆயிரத்து 322 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு மரணமடைந்தோர் எண்ணிக்கை 508 ஆகக் குறைந்தது, மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 10 ஆக உள்ளது.
இதுவரை 72 லட்சத்து 59 ஆயிரத்து 5-9 பேர் கரோனாவிலிருந்து மீண்டு நலமடைந்துள்ளனர். இதன் மூலம் இந்திய கரோனா குணமடைவு விகிதம் 90.85% ஆக உள்ளது. பலி விகிதம் 1.50% ஆக உள்ளது.
கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை தொடர்ந்து 6வது நாளாக 7 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது.
இன்றைய தேதியில் 6,10,803 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 7.64% ஆகும்.
ஐசிஎம்ஆர் தகவலின் படி இதுவரை மொத்தமாக 10 கோடியே 54 லட்சத்து87 ஆயிரத்து 680 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன. அக்.27ம் தேதி மட்டும் 10 லட்சத்து 66 ஆயிரத்து 786 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன.
நேற்று கரோனாவுக்கு பலியான 508 பேரில் மகாராஷ்டிராவில் 115 பேரும் மேற்கு வங்கத்தில் 58 பேரும் டெல்லி, கர்நாடகாவில் முறையே 44 பேரும், உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் முறையே 27 பேரும் பலியாகினர்.
1,20,010 கரோனா மரணங்களில் மகாராஷ்டிராவில் 43,463 பேரும், கர்நாடகாவில் 10,991 பேரும், தமிழ்நாட்டில் 10,983 பேரும் உ.பி.இல் 6,940 பேரும், ஆந்திராவில் 6,965 பேரும், மேற்கு வங்கத்தில் 6,604 பேரும், டெல்லியில் 6,356 பேரும், பஞ்சாபில் 4.138 பேரும், குஜராத்தில் 3,695 பேரும் பலியாகியுள்ளனர்.