Published : 12 May 2014 10:18 AM
Last Updated : 12 May 2014 10:18 AM

கேதார்நாத் யாத்திரையை ஒருவாரம் ஒத்திவையுங்கள்: கோயில் நிர்வாகம்

“தற்போதைய நிலையில் கேதார் நாத் கோயிலுக்கு வரும் பாதை மிக மோசமான நிலையிலுள்ளது. ஆகவே,பக்தர்கள் குறைந்தது ஒருவாரத்துக்கு தங்கள் பயணத் திட்டத்தை ஒத்திவைக்க வேண் டும்.” என தலைமைப் பூசாரி பீமாசங்கர் லிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

லிஞ்சௌலி-கேதார்நாத் பாதை மிகவும் செங்குத்தாக உள்ள தால், முதியவர்களுக்கச் சிரமம் ஏற்படும். அப்பகுதியில் இன்னும் பனி உறைந்துள்ளது. மண் ஈரப்பத மாக உள்ளது. மண் லேசாகச் சரி வதை பாதசாரிகள் உணர முடியும். சாலை சீரமைப்புப் பணிகள் முழுமையடைய இன்னும் 7-8 நாள்களாகலாம். ஆகவே, கேதார்நாத் பயணம் மேற்கொள் ளத் திட்டமிட்டுள்ள பக்தர்கள், அத்திட்டத்தைக் குறைந்தது ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்.

வழக்கமாகப் பயன்படுத்தப் படும் கோவேறு கழுதைகளும், இது வரை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை.

மாநில அரசு போதிய நடவடிக் கைகளை எடுத்துள்ளது. உணவு விநியோகம், தங்குமிடம் போன்ற அனைத்து வசதிகளும் தாராள மாகக் கிடைக்கின்றன. ஆனால், சாலை வசதி மட்டும் மோசமாக உள்ளது.

கடந்த ஆண்டு வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட துயரமான சம்பவம் பலரின் மனதை விட்டு அகலவில்லை. ஆகவே, வெளி மாநில பக்தர்களின் வருகை குறை வாக உள்ளது. தேர்தலும் பக்தர் களின் குறைவான வருகைக்கு ஒரு காரணம். தேர்தல் முடிந்த பிறகு, பக்தர்கள் வருகை அதிகரிக் கக் கூடும், என்றார் அவர்.

கேதார்நாத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்திருக்கிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “புனரமைப்புப் பணிகள் திருப்திகரமாக நடைபெறுகின் றன” என உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x