

மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங்குக்கு எதிராக டெல்லி, கொல்கத்தா உட்பட பல நகரங்களில் நேற்று போராட்டங் கள் நடைபெற்றன.
ஹரியாணாவில் தலித் குழந்தை கள் எரித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவம் குறித்து சில நாட் களுக்கு முன்பு நிருபர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் வி.கே. சிங், நாய் மீது யாராவது கல்லெறிந்தால்கூட அதற்கும் மத்திய அரசை குறை சொல்வது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.
அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். மத்திய அமைச்சர வையில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி தலைவர் பாஸ்வானும் வி.கே.சிங்கின் பேச்சை கண்டித் துள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லியில் நேற்று இளைஞர் காங்கிரஸ் அணியினர் சிங்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி னர். அப்போது போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே அமைச்சர் வி.கே சிங் நேற்று கொல்கத்தாவுக்கு சென்றார். அங்கு ராஜ்பவனுக்கு சென்ற அவருக்கு எதிராக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி காட்டினர்.
முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் இடதுசாரி கட்சியினர் 150 பேர் அமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்கள் தொடர்பாக பலரை போலீஸார் கைது செய்தனர்.