

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள பரமத் நிகேதன் ஆசிரமத்தில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்ச்சியில் அஜித்
தோவல் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாம் யாரையும் முதலில் தாக்கியது கிடையாது. இதன் காரணமாக மிகுந்த முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்
டிய அவசியம் எழுகிறது. குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய விவகாரங்களை முன்
கூட்டியே கண்டறிய வேண்டிய கட்டாயம் உள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு எங்கு அச்சுறுத்தல் உருவாகிறதோ அங்கேயே நேரடியாக சென்று இந்தியா போரிடும். சொந்த மண்ணில் மட்டுமல்ல, வெளிநாட்டு மண்ணிலும் இந்தியா போரிட தயங்காது. இதுதான் புதிய இந்தியா. நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமே ‘புதிய இந்தியாவில்’ முதலிடம் கொடுக்கப்படும்.
இந்தியா பண்பட்ட நாடு ஆகும். எந்தவொரு மதம், மொழி,இன ரீதியாக நமது நாடு செயல்படவில்லை. பன்மொழி கலாச்சாரம் என்ற ஆழமான அஸ்திவாரத்தின் மீது நாடு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அஜித் தோவல் பேசினார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த 2019 பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டுகளைவீசி அழித்தன. அப்போதே உலகநாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பியது. சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு பக்கபலமாக இருந்ததால் பாகிஸ்தான் பின்வாங்கியது.
தற்போது பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் ஓரணியில் திரண்டுள்ளன. குவாட் என்றழைக்கப்படும் இந்த கூட்டணியில் இருந்து, சற்று ஒதுங்கியிருந்த இந்தியா, லடாக் எல்லைப் பிரச்சினைக்குப் பிறகு கூட்டணியில் முழுமையாக ஐக்கியமாகிவிட்டது. இந்திய கடற்படை சார்பில் விரை
வில் நடத்தப்பட உள்ள ‘மலபார்’ போர் பயிற்சியில், குவாட்கூட்டணியை சேர்ந்த அனைத்துநாடுகளும் பங்கேற்கின்றன. இந்த பின்னணியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலின் கருத்து முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
நாகாலாந்து தனிநாடு கோரும் தீவிரவாத இயக்கமான என்.எஸ்.சி.என்.(கப்லாங்)தீவிரவாதிகள் தொடர்ந்து ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மோன் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணமடைந் தனர். இதுபோல் தாக்குதல் நடத்திவிட்டு மியான்மருக்குள் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு மியான்மர் நாட்டுக்குள் இந்திய ராணுவ வீரர்கள் நுழைந்து நாகா தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.