Published : 30 Oct 2015 10:41 AM
Last Updated : 30 Oct 2015 10:41 AM

ஹைதராபாத்தில் மேலும் 100 மலிவு விலை உணவகங்கள்

ஹைதராபாத் நகரில் ரூ.5 க்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மேலும் 100 மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.

ஹைதராபாத் நகரில் மாநகராட்சியும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அறக்கட்டளையும் இணைந்து, ஏழைகளின் பசியைப் போக்க ரூ.5 க்கு உணவு வழங்கி வருகிறது. இப்போது சுமார் 30 மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

இதையடுத்து, நகரின் லகடிகாபூல் மற்றும் அயோத்தியா கூட்டு ரோடு ஆகிய இரண்டு இடங்களில் மலிவு விலை உணவகங்களை அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ் நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறும்போது, “இந்த மலிவு விலை உணவு திட்டத்தின் மூலம் ஏழைகள் பயனடைந்து வருகிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் இந்த உணவகங்களில் நடுத்தர வர்க்கத்தினரும், மாணவர்களும் சாப்பிடுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஹைதராபாத் முழுவதும் இதுபோன்று 100 உணவகங்கள் விரைவில் திறக்கப்படும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சைபராபாத் எம்.எல்.ஏ. ராமசந்திரா ரெட்டி, மாநகராட்சி ஆணையர் சோமேஷ் குமார், உதவி ஆணையர் ரவி கிரண் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x