Published : 26 Oct 2020 01:23 PM
Last Updated : 26 Oct 2020 01:23 PM

ராணுவ பயன்பாட்டிற்கு சிக்கிம் எல்லை பகுதியில் சாலை: நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி

சிக்கிமின் கிழக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 310-த்தின் தொடக்கத்தில் இருந்து 19.350 கி.மீ வரை 19.85 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மாற்று சீரமைப்பு சாலையை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்பணித்தார்.

இந்த பாதையில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலை இயற்கை காரணங்களால் சேதம் அடைந்திருந்தது. கிழக்கு சிக்கிம் பகுதியில் ராணுவ தயார் நிலைக்கு இந்த சாலை மிக முக்கியம் என்பதால், அதை சீரமைக்க வேண்டிய தேவை எழுந்தது. மோசமான வானிலை காரணமாக, இந்த விழா சுக்னா பகுதியில் உள்ள 33வது படைப்பிரிவின் தலைமையகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சிக்கிம் மாநிலத்தில் எல்லை சாலைகளை மேம்படுத்தி வருவதற்காகவும், இரட்டை சாலை அமைப்பதற்காகவும் எல்லைகள் ரோடு அமைப்பினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

தொலைதூர பகுதிகளில் சாலைகளை மேம்படுத்துவது, ராணுவ தயார் நிலைக்கு மட்டும் மல்ல, அப்பகுதியின் சமூக-பொருளாதார முன்னேற்றத்துக்கும்தான் என அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். பிரதமரின் வடகிழக்கு கொள்கையின் வழியில், கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தப்படுத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

2009-ம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, பணிகள் நிறைவேற்றப்படாமல் இருந்தாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மாற்று சீரமைப்புப் பாதை கட்டும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டது குறித்தும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தாமங், புதிய சீரமைப்புப் பாதையானது சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலும், மாநிலத்தின் சமூக பொருளாதாரா நிலையை உயர்த்தும் வகையிலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறினார். சிக்கிம் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிப்பதால், எல்லைகள் ரோடு அமைப்பு மற்றும் மத்திய அரசின் பணியை முதல்வர் பிரேம் சிங் தாமங் வெகுவாக பாராட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x