

பிஹாரில் சீதா தேவிக்கு 'ராம் மந்திரை விட பெரிய கோயில் பிஹாரில் கட்டப்படும் என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுவரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான், தனது கட்சியை ஆட்சியில் அமர வைத்தால் பிஹாரில் சீதா தேவிக்கு ஒரு கோயில் கட்டப்படும், அது அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராம் மந்திரை விட மிகப் பெரியதாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.
பிஹாரில் சீதாமாரி பகுதியில் தேர்தல் பிராச்சாரத்தில்ற்கிடையே சீதாமாரியில் உள்ள புனாவுரா தமில் பிரார்த்தனை செய்தார்.
அதன் பிறகு சிராக் பஸ்வான் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டி:
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை விட சீதாமாரியில் மிகப் பெரிய கோயில் ஒன்றை சீதா தேவிக்கு கட்டப்பட வேண்டும் என்பது எனது விருப்பம். ஏனெனில் சீதா தேவி இல்லாமல் பகவான் ராமர் முழுமை அடையமாட்டார். மேலும், அயோத்தியின் ராமர் கோயிலையும் சீதாமாரியையும் இணைக்கும் ஒரு நடைபாதையும் கட்டப்பட வேண்டும்.
லோக் ஜன சக்தி ஆட்சிக்கு வருகிறதா என்று கேட்கிறீர்கள், எங்கள் அரசாங்கம் அமைக்கப்படும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
எங்கள் அரசு அமைக்கப்பட்டால் சீதா தேவி கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவோம். குறைந்த பட்சம் இப்போது முதலமைச்சராக இருப்பவர், மீண்டும் முதலமைச்சராக இருக்க மாட்டார், பாஜக தலைமையில் நாங்கள் பாஜக எல்ஜேபி இணைந்து அரசாங்கத்தை அமைப்போம். ''
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான லோக் ஜன சக்தியின் 'பிஹார் முதல் பிஹாரி முதல் கண்ணோட்டம்' (Bihar first Bihari first vision) என்ற தேர்தல் பிரச்சார கையேட்டிலேயே, உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராம் கோயிலைப் போன்று சீதாமாரியில் சீதா தேவிக்கான கோயிலை நிர்மாணிப்பதைப் பற்றி குறிப்பிட்டுள்ளோம்.
எங்கள் தேர்தல் பிரச்சார கையேட்டில், முன்மொழியப்பட்டபடி கோயிலின் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வோம். மேலும் கையேட்டில் சீதாமாரியை அயோத்தியுடன் இணைக்க ஆறு வழிச் சாலை நடைபாதை அமைப்பதாகவும் உறுதியளித்துள்ளோம். இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.
மேலும், அதன்படியே சாலை கட்டுமானம் பிஹாரிலிருந்து உத்தரபிரதேச எல்லை வரை இருக்க வேண்டும், அது சீதா ராம் தாழ்வாரம் என்று அழைக்கப்படும்.
பிஹாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த கட்சி எங்களுடையது, எனவே நாங்கள் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு எதிராகத்தான் எங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோமே தவிர பாஜகவுக்கு எதிராக அல்ல.
இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்தார்.