Published : 25 Oct 2020 09:26 AM
Last Updated : 25 Oct 2020 09:26 AM

முன்பு பெருவாரியான விவசாயிகள் பாசனத்துக்கான மின்சாரத்துகாக இரவு முழுதும் கண் விழிக்க நேர்ந்தது, இப்போது அவர்களுக்கு புதிய விடியல்: பிரதமர் மோடி பேச்சு

விவசாயிகளுக்கு 16 மணி நேரம் மின் விநியோகம் வழங்கும் கிசான் சூர்யோதய திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கிசான் சூர்யோதய் திட்டம் பற்றி கூறும்போது, “சாதாரண மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டுக்கு குஜராத் எப்போதும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. சுஜாலம்-சுப்லாம் மற்றும் சவுனி, கிசான் சூர்யோதய திட்டத்துக்கு பின்னர், விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மைல் கல்லை குஜராத் எட்டியுள்ளது.

மின்சாரத் துறையில் பல ஆண்டுகளாக செய்யப்பட்டுள்ள பணிகள், இத்திட்டத்துக்கு அடிப்படையானவை. மாநிலத்தின் திறனை அதிகரிக்க, மின் உற்பத்தி முதல் விநியோகம் வரை அனைத்து பணிகளும் திட்டமிட்டவாறு மேற்கொள்ளப்பட்டது. பதானில் 2010-ம் ஆண்டு சூரிய மின்சக்தி நிலையம் தொடங்கப்பட்ட போது, இந்தியா ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரே தொகுப்பு என்னும் வழியை உலகத்துக்கே காட்டும் என யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்கமாட்டார்கள். இந்தியா சூரிய மின்சக்தியில் கடந்த சில ஆண்டுகளில் உலகிலேயே 5-வது இடத்தைப் பிடித்து வேகமாக முன்னேறி வருகிறது.

முன்பெல்லாம் பெரும்பாலான விவசாயிகள் பாசனத்துக்கு இரவில் மட்டும் மின்சாரத்தை பெற்று வந்தனர் என்று கூறினார். இதற்காக அவர்கள் இரவு முழுவதும் கண் விழிக்க நேர்ந்தது. கிர்னார் மற்றும் ஜுனாகாத் பகுதிகளில் வன விலங்குகளின் அச்சுறுத்தலையும் விவசாயிகள் எதிர்நோக்கினர். கிசான் சூர்யோதய திட்டத்தின் கீழ், விவசாயிகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மும்முனை மின்சாரத்தை பெறுவார்கள். இது அவர்களுக்கு புதிய விடியலைக் கொண்டு வரும்.

ஏற்கனவே உள்ள மின்சாரம் கொண்டு செல்லும் முறைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல், முற்றிலும் புதிய திறனை இதில் உருவாக்குவதற்காக பணிகளை செய்துவரும் குஜராத் அரசின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். இத்திட்டத்தின் கீழ், அடுத்த 2, 3 ஆண்டுகளில், சுமார் 3500 சுற்று கிலோமிட்டருக்கு மின்சாரம் கொண்டு செல்லும் புதிய லைன்கள் அமைக்கப்படும். ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இது செயல்படுத்தப்படும். இதில், பெரும்பாலான கிராமங்கள் பழங்குடியினர் அதிகமாக வசிப்பவையாகும். குஜராத் முழுவதும் இத்திட்டத்தின் மூலம் மின்விநியோகம் கிடைக்கும் போது, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வில், மாற்றத்தை இது ஏற்படுத்தும்.

கால மாற்றத்துக்கு ஏற்ற விதத்தில் தொடர்ந்து பணியாற்றி விவசாயிகளின் முதலீட்டைக் குறைத்து, அவர்களது சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, தங்கள் வருமானத்தை இருமடங்காக்க உதவ வேண்டும். ஆயிரக்கணக்கான விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை (எப்பிஓ) அமைத்தல், வேம்பு தடவப்பட்ட யூரியா, மண் வள அட்டைகள், பல புதிய முன்முயற்சிகளை துவக்குதல் போன்ற விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கேயுஎஸ்யுஎம் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களில் சிறிய சூரிய சக்தி நிலையங்களை அமைப்பதில், எப்பிஓ-க்கள், பஞ்சாயத்துக்கள், இதுபோன்ற அனைத்து அமைப்புகளுக்கும் உதவி அளிக்கப்படுகிறது, பாசன பம்புகள் சூரிய சக்தி மூலம் இணைக்கப்படுகிறது. . இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் விவசாயிகளின் பாசன பயன்பாட்டுக்கு அளிக்கப்படும். உபரி மின்சாரத்தை அவர்கள் விற்பனை செய்யவும் முடியும்.

மின்சாரத் துறையுடன், பாசனத்துறை மற்றும் குடிநீர் திட்டங்களிலும் குஜராத் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டிருக்கிறது. தண்ணீருக்காக மக்கள் பெரும் சிரமங்களை முன்பு அனுபவித்து வந்தனர். முன்பு கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாத மாவட்டங்களை இன்று குடிநீர் சென்றடைந்துள்ளது. குஜராத்தின் வறண்ட பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைந்துள்ளதற்கு சர்தார் சரோவர் திட்டம், தண்ணீர் தொகுப்புகள் போன்ற திட்டங்களை நிறைவேற்றியதற்காக பெருமிதம் கொள்கிறோம். குஜராத்தில் 80 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிய மாநிலம் என்ற பெருமையை குஜராத் விரைவில் பெறும். கிசான் சூர்யோதய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், ஒரு துளியில் பல பயிர்கள் என்ற தாரகமந்திரத்தை அமல்படுத்த விவசாயிகள் முனைய வேண்டும்

பகல் வேளையில் மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாயிகள் நுண் பாசனத்தை மேற்கொள்ள இது உதவும் என்பதுடன், கிசான் சூர்யோதய திட்டம் மாநிலத்தில் நுண் பாசனத்தை விரிவாக்கவும் உதவும்.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x