

மருத்துவ உலகில் மிகவும் அரிதாக நடக்கும் சில விசித்திரங்களில் இதுவும் ஒன்று. மேற்கு வங்க மாநிலத்தின் மேற்கு மிட்னபூரில் 4 வயது சிறுவன் வயிற்றிலிருந்து உயிரற்ற சினைக்கரு அகற்றப்பட்டது.
சிறுவனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட ஜார்கிரமில் உள்ள நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டார். முதலில் கட்டி ஏதாவது இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர். ஆனால் அல்ட்ராசோனோகிராபி மற்றும் சிடி ஸ்கேன் செய்து பார்த்த போது சிறுவனின் அடிவயிற்றுப் பகுதியில் உயிரற்ற சினைக்கரு இருந்தது தெரிய வந்தது என்று டாக்டர் சிர்ஷேந்து கிரி தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது, கைகள், கால்கள், நகங்களுடன் பாதி உருவான தலையுடன் உயிரற்ற சினைக்கரு அகற்றப்பட்டது.
கருவுற்றலின் ஆரம்பகாலத்தில் இரட்டைக் குழந்தையாக இருந்தால் ஒன்றன் கரு மற்றொன்றுக்குள் தொப்புள் கொடி வழியாக நுழையும் வாய்ப்பு உள்ளது என்ற டாக்டர் கிரி, பிறந்த பிறகு இவரின் வயிற்றில் ஒட்டுண்ணியாக அது வளர்ந்து வந்துள்ளது என்றார்.
மருத்துவ உலகில் மிகவும் அரிதாக இவ்வாறு நிகழ்வதுண்டு என்கிறார் டாக்டர் கிரி.