

இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 78 லட்சத்து 14 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,370 பேருக்கு கரோனா பீடிக்க, பலி மேலும் 650 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 70 லட்சத்து 16 ஆயிரத்து 46 ஆக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 89.78% ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, ஆனால் குணமடைந்த இந்த 70 லட்சத்துக்கும் அதிகமானோரில் எத்தனை பேர் அறிகுறியற்ற கரோனா தொற்றாளர்கள், எத்தனை பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளனர். எத்தனை பேர் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர் என்ற துல்லிய விவரங்கள் இல்லை.
கடந்த 24 மணி நேரத்தில் மேல்ம் 650 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 1,17,956 ஆக அதிகரித்துள்ளது. பலி விகிதம் 1.51% ஆக குறைந்துள்ளது.
தற்போது 6 லட்சத்தி 80 ஆயிரத்து 680 பேர் கரோனா சிகிச்சையில் இருக்கின்றனர். இது மொத்த கரோனா எண்ணிக்கையில் 8.71% என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிஎம்ஆர் தகவலின் படி மொத்த சாம்பிள்கள் சோதனை எண்ணிக்கை 10 கோடியே 13 லட்சத்து 82 ஆயிரத்து 564 ஆக உள்ளது. நேற்று மட்டும் 12 லட்சத்து 69 ஆயிரத்து 479 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்டில் 20 லட்சம் கடந்த பாதிப்பு எண்ணிக்கை இன்றைய தேதியில் 78 லட்சத்தைக் கடந்துள்ளது.
650 பேர் கரோனாவுக்கு ஒரே நாளில் நேற்று பலியானதில் மகாராஷ்ட்ராவில் 184 பேர், மேற்கு வங்கத்தில் 60, சத்திஸ்கரில் 58, கர்நாட்காவில் 51, உ.பி.யில் 40, தமிழகத்தில் 33, டெல்லி மற்றும் கேரளாவில் தலா 26 பேர் மரணமடைந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கி 1,17,956-ல் மகாராஷ்டிராவில் 43,015 பேர் பலியாகி இன்னும் முதலிடம் வகிக்கிறது, தமிழ்நாடு 10,858 பலிகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிரது. கர்நாடகாவில் 10,821, உ.பி.யில் 6,830, ஆந்திராவில் 6,544, மே.வங்கத்தில் 6,368, டெல்லியில் 6,189, பஞ்சாபில் 4,095, குஜராத்தில் 3,673 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்
இந்த மரணங்களில் 70 சதவீத மரணங்கள் கரோனாவுடன் நீண்டகால நோயுள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.