Published : 24 Oct 2020 07:24 AM
Last Updated : 24 Oct 2020 07:24 AM

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடிக்கும் முதல்வர் நிதிஷுக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி தகவல்

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கும் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணிஅமைத்துள்ளன. இந்நிலையில், நவாடாவில் நேற்று நடைபெற்றதேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் ராகுல் காந்திபேசும்போது, “தேர்தல் வந்துவிட்டதால் பிஹாருக்கு பிரதமர் மோடி வந்துள்ளார். பிஹாரைச் சேர்ந்த இளம் ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதே பிரதமர், இந்திய-சீன எல்லையில் நமது ராணுவ வீரர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்.

செல்லும் இடங்களில் எல்லாம் பொய்களாக சொல்லி வருகிறார் பிரதமர் மோடி. சீன ராணுவம் நமது பகுதிக்குள் வரவில்லை என்று பிரதமர் மோடி சொல்கிறார். அப்படியானால் நமது ராணுவ வீரர்கள் உயிரிழக்கும்போது பிரதமர் மோடி எங்கிருந்தார்.

பொது முடக்கக் காலத்தின் போது லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடைபயணமாக தங்களது சொந்த ஊர் சென்றனர். அவர்களுக்கு கேட்டபோது உணவு தரவில்லை. வேலை தரவில்லை. அவர்கள் நடந்தால் நடந்து செல்லட்டும் என்று பிரதமர் மோடி விட்டுவிட்டார். அவர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில்கள் கூட ஏற்பாடு செய்யவில்லை. அவர்கள் உயிரிழந்தால் பரவாயில்லை. எங்களுக்குக் கவலை இல்லைஎன்று மத்திய அரசு கைவிட்டுவிட்டது. அதற்காக, பிரதமர் மோடிக்கும் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் பிஹார் மக்கள் தகுந்த பதிலை சொல்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x