Published : 24 Oct 2020 06:19 AM
Last Updated : 24 Oct 2020 06:19 AM

100 இந்தியர்களிடம் ‘ஸ்புட்னிக் வி’ பரிசோதனை

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ கரோனா தடுப்பு மருந்தை, 100 இந்தியர்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்த மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிஜிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால், தடுப்பூசியை உருவாக்கி விட்டதாக ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. ‘ஸ்புட்னிக் வி’ எனப் பெயரிடப்பட்ட இந்த தடுப்பு மருந்து, ரஷ்யாவில் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மருந்தை ஆய்வகத்தில் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தவும், அவற்றை விநியோகிக்கவும் இந்தியாவின் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. எனினும், இந்த மருந்தை மனிதர்களிடம் பரிசோதனை நடத்த இந்தியா அனுமதி மறுத்து வந்தது. இந்நிலையில், இதற்கான அனுமதியை இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது வழங்கியுள்ளது. அதன்படி, ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பு மருந்தை 100 இந்தியர்களுக்கு செலுத்தி விரைவில் சோதனை நடத்தப்படவுள்ளதாக மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட சோதனையாக இது இருக்கும் என்றும், இப்பரிசோதனை வெற்றி பெற்றால் மூன்றாம் கட்ட சோதனைக்கு நகர்வோம் என்றும் டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனம் கூறியுள்ளது.

ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 10 கோடி டோஸ் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பு மருந்துகள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x