Published : 23 Oct 2020 07:11 AM
Last Updated : 23 Oct 2020 07:11 AM

பெண்களுக்கு அதிகாரம் வழங்க அரசு உறுதி: மேற்கு வங்க துர்கா பூஜை விழாவில் பிரதமர் மோடி தகவல்

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த துர்கா பூஜை நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நேற்றுதொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

சக்தியின் அடையாளமாக துர்கா தேவி வணங்கப்படுகிறார். துர்கா பூஜை நாளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதில் எனது தலைமையிலான மத்திய அரசு மீண்டும்உறுதியேற்கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. நாட்டின்26 கோடி மகளிருக்கு வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது, முத்ரா திட்டத்தின் கீழ் கடன் அளித்தல், ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் அவர்களுக்கு கற்பிப்போம்’ திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பேறுகால விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பெண்கள் பாதுகாப்பிலும் அரசு கவனத்துடனும் அக்கறையோடும் செயல்படுகிறது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனைவிதிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ராம
கிருஷ்ண பரமஹம்சர், விவே கானந்தர், ரவீந்திரநாத் தாகூர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்து சிறந்த சமூக சீர்திருத்தவாதிகளாகவும் ஆன்மிக தலைவர்களாகவும், சுதந்திர போராட்டத் தியாகிகளாகவும் திகழ்ந்தனர். துர்கா பூஜை இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒன்றுபட்ட வலிமையையும் பிரதிபலிக்கிறது.

இவ்வாறு மோடி பேசினார்.

பிரதமரின் உரையை 294பேரவை தொகுதிகளில் 78,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பாஜக ஏற்பாடு செய்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x