Published : 23 Oct 2020 06:56 AM
Last Updated : 23 Oct 2020 06:56 AM

அறிவியல், தொழில்நுட்பம் புதுமைக் கொள்கை 2020: மாநில அமைச்சர்களுடன் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கொள்கை 2020 குறித்து மாநில அமைச்சர்களோடு மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விரிவான ஆலோசனை நடத்தினார்

அடிமட்டம் வரை சென்றடையும் ஆதாரம்-சார்ந்த, ஒருங்கிணைந்த தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கொள்கை 2020-ஐ கட்டமைக்கும் செயல்பாட்டில் இணையுமாறு மாநிலங்களுக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

மாநிலங்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்களோடு, தற்போது இயற்றப்பட்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கொள்கை 2020 குறித்த காணொலி மூலமான விரிவான ஆலோசனையின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

"நம்முடைய அறிவியல் சூழலியலுக்கு மறு-புத்தாக்கம் அளிக்கவும், முன்னுரிமைகளை மறுசீரமைக்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாம் எடுக்கும் முயற்சிகள் நேரடியாக நமது சமூகம் மற்றும் பொருளாதாரத்துக்கு நன்மை அளிக்கவும் செய்வதை இந்த கொள்கை லட்சியமாகக் கொண்டுள்ளது," என்று ஹர்ஷ் வர்தன் கூறினார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலும், மற்றும் மாநிலங்களுக்கு இடையிலும், சிறப்பான ஒருங்கிணைப்பை கட்டமைப்பதற்கான மைல்கல் நிகழ்வு தொழில்நுட்பம் மற்றும் புதுமை கொள்கை 2020 குறித்த இந்த விரிவான ஆலோசனை என்று அவர் தெரிவித்தார்.

"தற்சார்பு இந்தியாவை கட்டமைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான புரிதலும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். இந்த பெருந்தொற்று காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது," என்று அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x