பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கரோனா தொற்று

பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி : கோப்புப்படம்
பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி : கோப்புப்படம்
Updated on
1 min read


பிஹார் மாநில துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அவரே ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 55 ஆயிரத்து 839 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 77 லட்சத்து 6ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 68 லட்சத்து ஆயிரத்து 74 ஆயிரத்து 518 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தாக்கத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என யாரும் தப்பவில்லை. மத்திய அமைச்சர் அமித ஷா, நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். இதேபோல பல மாநிலங்களளில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கரோனவில் பாதிக்கப்பட்டு மீண்டனர்.

இந்நிலையில் பிஹார் மாநிலத்தில் 3 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு வரும் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

பாஜக, ஐக்கிய ஜனதாதளம்கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

சுஷில் குமார் மோடி தனது ட்விட்டர் பதிவில்கூறுகையில் “ நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனது உடல்நிலை சீராக இருக்கிறது. லேசான காய்ச்சல் கடந்த 2 நாட்களாக இருக்கிறது.

பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். நுரையீரலில் சிடி ஸ்கேன் செய்ததில் இயல்பாகவே இருக்கிறது எனத் தெரியவந்ததால் விரைவில் பிரச்சாரத்துக்கு திரும்புவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஷாநவாஸ் ஹுசைன் பிஹார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது கரோனாவில் சமீபத்தில் பாதிக்கப்பட்டார். இதை அறிந்தவுடன் அவருடன் சேர்ந்து தேர்தல் பிரச்தாரத்தில் பங்கேற்ற சுஷில் குமார் மோடி தன்னை தனிைமப்படுத்திக்கொண்டார்.

சுஷில் குமார் மோடி மட்டுமல்லாமல் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே, ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in