

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான அசல் கட்டுப்பாட்டைக் கோட்டை (எல்ஏசி) தாண்டிஇந்தியாவுக்குள் வந்த ராணுவ வீரர் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கிழக்கு லடாக் பகுதியில் சீனராணுவம் கடந்த மே மாதம் அத்துமீறி கூடாரங்களை அமைத்தது. பின்னர் ஜூன் மாதம் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது. பதற்றத்தைக் குறைக்க 2 நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 18-ம்தேதி சீன ராணுவ வீரர் அசல்எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைதாண்டி இந்தியப் பகுதிக்குள்அத்துமீறி நுழைந்தார். இதையடுத்து அவரை இந்திய ராணுவம் சிறைபிடித்தது. அந்த வீரரைவிடுவிக்குமாறு சீன ராணுவம் கேட்டுக்கொண்டது.
இதைத் தொடர்ந்து, சிறைபிடித்த ராணுவ வீரரை, டெம்சாக்பகுதியில் சீன ராணுவத்திடம் இந்திய ராணுவ அதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர். இதை சீன ராணுவமும் உறுதி செய்துள்ளது.
நல்லெண்ண அடிப்படையிலும், இரு நாட்டு ராணுவ உயர்அதிகாரிகளின் பேச்சுவார்த் தைக்கு இடையூறு ஏற்படாதவகையிலும் அவர் விடுவிக்கப்பட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் இந்திய, சீன ராணுவஉயர் அதிகாரிகள் இந்த வாரஇறுதியில் மீண்டும் சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.