Published : 22 Oct 2020 07:31 AM
Last Updated : 22 Oct 2020 07:31 AM

11 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் 13.7 டிகிரி வெப்பநிலை பதிவு

வட மாநிலங்களைப் பொறுத்த வரை, வழக்கமாக செப்டம்பர் மாதம் முதலே குளிர்காலம் தொடங்கிவிடும். ஆரம்பத்தில் லேசான குளிருடன் தொடங்கி, பின்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் உச்சத்தை தொடும்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் இரவு குறைந்தபட்ச வெப்பநிலையாக 13.7 டிகிரி செல்சியஸ் (56.6 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகியுள்ளது. இவ்வாறு, அக்டோபர் மாதத்தில் குறைவான வெப்ப நிலைநிலவுவது 11 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறை யாகும். 2009-ம் ஆண்டு அக்.26-ம் தேதி 13.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதே இதுவரை குறைந்தபட்ச வெப்பநிலையாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x