இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை கைவிட வேண்டும்: பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அறிவுரை

இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை கைவிட வேண்டும்: பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அறிவுரை
Updated on
1 min read

இந்தியாவும் பாகிஸ்தானும் மோதல் போக்கை கைவிட வேண் டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி அறிவுறுத்தியுள்ளார்.

‘நெய்தர் ஏ ஹாக் நார் ஏ டவ்’ என்ற பெயரில் கசூரி எழுதியுள்ள புத்தகம் இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் இந்திய- பாகிஸ்தான் உறவு, காஷ்மீர் விவகாரம் உட்பட பல்வேறு பழைய சம்பவங்களை அவர் நினைவுகூர்ந்து எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகம் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றது, ரஷ்யாவின் உபா நகரில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியது ஆகியவை வரவேற்கத் தக்கது.

இருநாட்டு பிரதமர்கள் சந்திக் கும் முன்பு அதிகாரிகள் நிலையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டியது அவசி யம். அப்போதுதான் தலைவர் களின் பேச்சுவார்த்தையில் பலன் கிடைக்கும். உபா நகரில் மோடி யும் நவாஸும் சந்தித்துப் பேசு வதற்கு முன்பு போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்பட வில்லை. அதனால்தான் அந்தப் பேச்சுவார்த்தை பலன் அளிக்க வில்லை.

தீவிரவாத பிரச்சினையில் இந்தியாவும் காஷ்மீர் விவகாரத் தில் பாகிஸ்தானும் பிடிவாதமாக உள்ளன. இதனால்தான் அமை திப் பேச்சுவார்த்தையை முன் னெடுத்துச் செல்ல முடியவில்லை.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண திரைமறைவு பேச்சுவார்த் தைகள் நடைபெற்றன. அந்தப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐ. அமைப்பும் கூட ஆதரவு அளித்தன. ஆனால் திரைமறைவு முயற்சி பலன் அளிக்கவில்லை.

காஷ்மீர் விவகாரத்துக்கு மட்டு மல்ல, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கில்ஜித், பல்சிஸ்தான் ஆகிய பகுதிகளின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.

பாகிஸ்தான் அரசியலில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது. எங்கள் நாட்டில் பிரதமரைகூட எளிதாக சிறையில் தள்ளிவிட முடியும். ஆனால் மத விவகாரங்களை கையாள்வது மிகவும் கடினம்.

சர்வதேச அரங்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. இதனை கைவிட வேண்டும். இருநாட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முக்கிய பங்காற்றினார். இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி அதே அணுகுமுறையைப் பின்பற்றி இருநாட்டு உறவை மேம்படுத்து வார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in