Published : 21 Oct 2020 04:45 PM
Last Updated : 21 Oct 2020 04:45 PM

இந்தியாவின் ஐசிஏஐ மலேசியாவின் மிக்பா இடையே ஒப்பந்தம்: மத்திய  அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் ஐசிஏஐ மற்றும் மலேசியாவின் மிக்பா ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ மற்றும் மலேசிய பட்டய பொது கணக்காளர்கள் நிறுவனமான மிக்பா ஆகியவற்றுக்கு இடையேயான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம், தகுதியுடைய ஐசிஏஐ உறுப்பினர் மிக்பாவிலும்,

தகுதியுடைய மிக்பா உறுப்பினர் ஐசிஏஐவிலும் இணைந்து கொள்ள வழிவகுக்கும்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களோடு இருதரப்பு கூட்டு ஏற்படுத்திக்கொள்ள ஐசிஏஐ விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக மிக்பா உடன் ஒப்பந்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், உரிய முறையில் ஐசிஏஐ சான்றளித்த நபர்களை மிக்பாவும், அதேபோன்று மிக்பா சான்றளித்த உறுப்பினர்களை ஐசிஏஐவும் ஏற்றுக்கொள்ளும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x