Published : 21 Oct 2020 07:49 AM
Last Updated : 21 Oct 2020 07:49 AM

காஷ்மீரை சீனா பகுதியாக காட்டிய வரைபடத்தை திருத்தியது ட்விட்டர்

புதுடெல்லி

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ட்விட்டர் நிறுவனத்தின் ஜியோடேக் பதிவு வரை படத்தில் காஷ்மீர், சீனப் பகுதியில் இருப் பதாக காட்டப்பட்டது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் நிதின் கோகலே ட்விட்டரில் உள்ள தவறைக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘தொழில்நுட்ப தவறு குறித்து ஞாயிற்றுக்கிழமை கண்ட றிந்தோம். இந்த உணர்வுபூர்வமான விஷயத்தை புரிந்துகொண்டு மதிப்பளிக் கிறோம். ஜியோடேக் வரைபடப் பிரச் சினையை கண்டறிந்து சரிசெய்ய எங்கள்தொழில்நுட்பக் குழுவினர் விரைந்து பணியாற்றுகின்றனர்" என்று விளக்கமளித்தார்.

இதைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் ஜம்மு காஷ்மீர் சீனாவின் பகுதியாக காட்டப்பட்ட ஜியோடேக் வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் திருத்தி சரி செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x