

மாவட்ட பஞ்சாயத்துகளைப் படிப்படியாக மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கைகளை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.
தொகுதிகள் மற்றும் மாவட்டங்களை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கைகளை, மத்திய வேளாண் மற்றும் விவசாய நலன், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொளி வாயிலாக இன்று வெளியிட்டார்.
இந்த அறிக்கையில், தொகுதிகள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளைப் படிப்படியாக மேம்படுத்துவது தொடர்பாக திட்டங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
தொகுதிகள் மற்றும் மாவட்ட அளவில் இருக்கும் வளங்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னுரிமைப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்தப் பகுதிகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்த இந்த வரைவறிக்கை ஏதுவாக இருக்கும் என்று நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். ஊரக இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சியை அடைவதற்கு இந்த அறிக்கை உதவியாக இருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.