

தேர்தல் ஆணைய பரிந்துரைகளின்படி மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்காக செலவிடும் தொகையை 10% அதிகரித்துள்ளது மத்திய அரசு.
கரோனா வைரஸ் முடக்கத்தினால் வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் கடினப்பாடுகளைக் கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் 10 சதவீதம் கூடுதலாக தேர்தல் செலவுகளை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
பிஹார் சட்ட ப்பேரவை தேர்தல் மற்றும் லோக்சபா இடம் ஒன்று மற்றும் 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வருவதையொட்டு செலவினம் குறித்த இந்த வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 10% தேர்தல் செலவை உயர்த்தி மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், தற்போது மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் ரூ.77 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று ரூ.70 லட்சத்திலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல்களில் நிற்கும் வேட்பாளர்கள் செலவு செய்யும் வரம்பு ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.30.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். கடந்த முறை வேட்பாளர் தேர்தல்செலவு வரம்பு உயர்த்தப்பட்டது 2014 மக்களவைத் தேர்தலின் போது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஹாரில் சட்டமன்றத் தேர்தல்கள் அக்.28, நவ.3, 7, ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வால்மீகி நகர் லோக்சபா இடைத்தேர்தல் மற்றும் மணிப்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நவ.7ம் தேதி நடைபெறுகிறது.