பாகிஸ்தானில் தவிக்கும் இளம்பெண் கீதா பெற்றோரை அடையாளம் காட்டினார்: விரைவில் இந்தியா திரும்புகிறார்

பாகிஸ்தானில் தவிக்கும் இளம்பெண் கீதா பெற்றோரை அடையாளம் காட்டினார்: விரைவில் இந்தியா திரும்புகிறார்
Updated on
1 min read

இந்தியாவில் இருந்து கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வழி தவறி பாகிஸ்தான் சென்ற சிறுமி கீதாவை பாகிஸ்தானின் பஞ்சாப் வனத் துறையினர் மீட்டு கராச்சியில் உள்ள ஒரு அறக்கட்டளையிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமியால் பேச முடியாது மற்றும் அவருக்கு காது கேட்கும் திறனும் கிடையாது. இதனால் சிறுமியால் தனது பெற்றோர் பற்றியோ, தனது சொந்த ஊர் பற்றியோ எதுவும் தெரிவிக்க முடிய வில்லை. கீதாவுக்கு தற்போது 23 வயது ஆகிறது. இந்தியாவில் உள்ள கீதாவின் பிறந்த ஊரையும், பெற்றோரையும் கண்டுபிடித்து அவரை, அவர்களிடம் ஒப்படைக்க அறக்கட்டளை சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இந்திய வெளி யுறவுத்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டது. பாகிஸ்தான் நாட் டிற்கான இந்திய தூதர் ராகவன் கராச்சி சென்று கீதாவை சந்தித்து பேசினார். இதற்கிடையே கீதா தங்களுடைய மகள்தான் என்று ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிலர் உரிமை கோரினர். அவர்களிடம் மத்திய அரசு புகைப்படங்களை வாங்கியது.

இந்த புகைப்படம் இஸ்லாமா பாத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் கீதாவிற்கு அனுப்பப்பட்டது. இதில் ஒரு போட்டோவில் தனது தந்தை மற்றும் வளர்ப்பு தாயை கீதா அடையாளம் கண்டு பிடித்து உள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று கூறும்போது, "கீதா குடும்பம் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடித்து விட்டோம். டி.என்.ஏ. பரிசோதனையை அடுத்து கீதா அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in