Published : 19 Oct 2020 07:43 AM
Last Updated : 19 Oct 2020 07:43 AM

பாகிஸ்தான் தேர்தலில் ராகுல் போட்டியிட போகிறாரா?- பாஜக மூத்த தலைவர் சம்பித் பாத்ரா கேள்வி

பாகிஸ்தான் தேர்தலில் ராகுல் போட்டியிடப் போகிறாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் சம்பித் பாத்ரா கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சர்வதேச அரங்கில் இந்தியாவை இழிவுபடுத்தி வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் ஊடகங்களில் இந்தியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இவற்றை பார்க்கும்போது பாகிஸ்தான் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட ஆயத்தமாகி வருவதாகத் தெரிகிறது.

எனது சந்தேகத்தை ராகுலிடமே நேரடியாக கேட்கிறேன். நீங்கள் பாகிஸ்தான் தேர்தலில்போட்டியிட போகிறீர்களா? தயவு செய்து பதில் கூறுங்கள்.

பாஜக வட்டாரத்தில் ராகுல் காந்தியை, ‘ராகுல் லாகூரி' (பாகிஸ்தானின் லாகூர் நகரவாசி) என்று அழைக்கத் தொடங்கிவிட்டோம். பாகிஸ்தான் தேர்தலில் ராகுல் வெற்றி பெறுவதற்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்.

‘இந்திய தேசிய காங்கிரஸ்' விரைவில் ‘பாகிஸ்தான் தேசிய காங்கிரஸாக' மாறப்போகிறது. அந்தக் கட்சி சார்பில் ஜின்னாவின் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவார்கள். லாகூர் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக காங்கிரஸ் கூச்சலிட்டது ஏன்? இந்தியாவை ராகுல் காந்தி வெறுக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

வடகிழக்கு மக்கள், தப்லிக் ஜமாத் விவகாரங்கள் குறித்தும் பாகிஸ்தான் ஊடகத்தில் எதிர் மறையான கருத்துகளை சசி தரூர் கூறியிருக்கிறார். இந்த விவ காரங்களை எல்லாம் பாகிஸ்தான் ஊடகத்தில் பேச வேண்டுமா?

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x