

குஜராத்தில் மொபைல் இணையதள சேவை மீதான தடை நேற்று அதிகாலை முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
குஜராத்தில் படேல் சமூகத் தினரின் இடஒதுக்கீட்டு போராட்டத் தில் பெரும் வன்முறை மூண்டதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மொபைல் இணையதள சேவைக்கு கடந்த 25-ம் தேதி இரவு குஜராத் அரசு தடை விதித்தது. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் விஷமிகள் வதந்தி பரவச் செய்யலாம் என்ற அச்சத்தில் இத்தடை விதிக்கப்பட்டது.
இயல்புநிலை திரும்பியதால் சில பகுதிகளில் திங்கள்கிழமை தடை நீக்கப்பட்டது. இந்நிலை யில் செவ்வாய்க்கிழமை நள்ளிர வுடன் இந்த தடை மாநிலம் முழுவதும் விலக்கிக் கொள்ளப் பட்டது.