

கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டியுள்ள வடகிழக்கு அரபிக் கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து கூறியுள்ளதாவது:
கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டியுள்ள வடகிழக்கு அரபிக் கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது
மேற்கு- வடக்கு திசையில் இது மேலும் நகர்ந்து, கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டியுள்ள வடகிழக்கு அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கடல் அலைகள் மிகவும் சீற்றத்துடன் காணப்படும். கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டியுள்ள வடகிழக்கு அரபிக் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சௌராஷ்டிராவின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.