

ஒன்றரை மாதங்களுக்கு பிறகு தற்போதைய கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது.
கோவிட்டுக்கு எதிரான போரில் ஒரு முக்கிய மைல்கல்லை இந்தியா கடந்துள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில் முதல் முறையாக தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.
நாட்டில் தற்போது பாதிப்படைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 7,95,087 ஆகும். மொத்த பாதிப்புகளில் இது வெறும் 10.70 சதவீதம் ஆகும். இதற்கு முன் செப்டம்பர் 1 அன்று தான் பாதிப்புகள் எண்ணிக்கை 8 லட்சத்திற்கு குறைவாக (7,85,996) இருந்தது.
குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பாதிப்புகள் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து கொண்டே வருகிறது.
இதுவரை குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்தை (65,24,595) கடந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மற்றும் தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கைக்கு இடையேயான இடைவெளி, தற்போது 57,29,508 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 70,816 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 62,212 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தேசிய குணமடைதல் விகிதம் மேலும் அதிகரித்து 87.78 சதவீதத்தை தொட்டுள்ளது.
மத்திய அரசின் தலைமையிலான இலக்கு நிர்ணயித்த யுக்திகளின் மூலம் குணமடைதல்களின் எண்ணிக்கை அதிகமாகி, உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து இந்த குறிப்பிடத்தக்க சாதனை சாத்தியமாகியுள்ளது.