

சர்வதேச பங்குச்சந்தைகள் தடுமாற்றுத்துடன் இயங்கும் நிலையில், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிவை கண்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகள் சரிந்து 26,000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. நிப்டி 50.35 புள்ளிகள் சரிந்து 7,920.95 புள்ளிகளிலும் வர்த்தகமாகியது.
மதியம் 2 மணியளவில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்தன. தொடர்ந்து நிப்டியும் 2.5 சதவீத சரிவை கண்டு 7,750 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தொடர்ந்து சென்செக்ஸ் மேலும் 700 புள்ளிகள் சரிந்து தள்ளாடும் நிலையில் மும்பை வர்த்தகம் நடந்து வருகிறது.