Published : 16 Oct 2020 07:35 PM
Last Updated : 16 Oct 2020 07:35 PM

எப்ஏஓ 75-வது ஆண்டு; ரூ.75 நாணயம்: பிரதமர் மோடி வெளியிட்டார்

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் (எப்ஏஓ) 75வது ஆண்டை முன்னிட்டு, 75 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்.

உலகம் முழுவதும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் எப்ஏஓ வின் பங்கை பாராட்டினார். சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க 17 பயிர் வகைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், உணவு பாதுகாப்புக்கான இந்தியாவின் உறுதியை காட்டுவதாக பிரதமர் கூறினார்

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின்(எப்ஏஓ) 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, 75 ரூபாய் நினைவு நாணையத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார். சமீபத்தில் உருவாக்கப்பட்ட 17 ஊட்டச்சத்து மிக்க பயிர் வகைகளை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க உலக முழுவதும், தொடர்ந்து பணியாற்றுபவர்களை வாழ்த்தினார். நமது விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், அங்கன்வாடி ஆஷா பணியாளர்கள்தான் உட்டச்சத்து குறைபாடுக்கு எதிரான இயக்கத்தின் அடித்தளம் என பிரதமர் கூறினார். விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் தங்கள் கடின உழைப்பால், நாட்டின் உணவு தானியக்களஞ்சியங்களை நிரப்புவதோடு, அவர்கள் ஏழைகளுக்கு உதவ, அரசுக்கு உதவுகின்றனர் என பிரதமர் குறிப்பிட்டார். இந்த முயற்சிகளால், கொரோனா நெருக்கடியிலும், ஊட்டசத்து குறைபாட்டுக்கு எதிராக இந்தியா கடுமையாக பேராடி கொண்டிருக்கிறது என பிரதமர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், உலகம் முழுவதும் பசியை போக்கவும், எப்ஏஓ உதவியது என்றும், ஊட்டச்சத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றியது என்றும், அதன் சேவை 130 கோடி இந்தியர்களால் மதிக்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார். உலக உணவு திட்டத்துக்கு, இந்தாண்டு நோபல் பரிசு கிடைத்தது, உணவு மற்றும் வேளாண் நிறுவனத்துக்கு மிகப் பெரிய சாதனை என அவர் கூறினார். எப்ஏஓ.வுடன் இந்தியா இணைந்து செயல்படுவது வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் அது மகிழ்ச்சியளிப்பதாகவும், பிரதமர் குறிப்பிட்டார்.

உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் தலைமை இயக்குனராக டாக்டர் பினாய் ரஞ்சன் சென் இருந்தபோது, உலக உணவு திட்டம் தொடங்கப்பட்டதாக பிரதமர் கூறினார். பஞ்சம் மற்றும் பசியின் வேதனையை அவர் உணர்ந்திருந்தார் என்றும், அவரது பணிகள் உலகத்துக்கு இன்றும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார். ஊட்டச்சத்து குறைபாடுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை எப்ஏஓ உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். இளம் வயதில் கர்ப்பம் தரிப்பது, போதிய கல்வி இல்லாதது, தகவல் கிடைக்காதது, சுகாதார குறைபாடு ஆகியவை காரணமாக நாம் எதிர்பார்த்த பயனை அடைய முடியவில்லை என பிரதமர் குறிப்பிட்டார்.

பல ஆண்டு அனுபவங்களால், 2014ம் ஆண்டுக்குப்பின் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக பிரதமர் கூறினார். அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், பல குறைபாடுகள் அகற்றப்பட்டதாக அவர் கூறினார். தேசிய ஊட்டசத்துத்து திட்டம், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டப்பட்டது, வானவில் திட்டம், ஜல்ஜீவன் திட்டம் போன்ற பல திட்டங்களை அவர் பட்டியலிட்டார். ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையை போக்க, முக்கியமான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், புரதம், இரும்பு, துத்தநாக சத்துக்கள் அடங்கிய பயிர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.

2023ம் ஆண்டை தினைகள் ஆண்டாக அறிவிக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு எப்ஏஓ முழு ஆதரவு அளிப்பதற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். ஊட்டசத்துள்ள உணவுகளை உட்கொள்வது, தினைகள் அதிகளவில் கிடைப்பது, சிறு விவசாயிள் பயனடைவதை இது ஊக்குவிக்கும் என அவர் கூறினார். வளமின்மை, தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரண்களால், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், பெரும்பாலும் தினை வகைகளை அதிகம் பயிரிடுவதாகவும் பிரதமர் கூறினார். இது இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் பயனளிக்கும் என பிரதமர் கூறினார்.

சில பொதுவான பயிர்களில், நுண் ஊட்டசத்துக்கள் குறைவாக இருப்பதால், இப்பிரச்னையை போக்க நெல், கோதுமை உட்பட ஊட்டசத்து மிக்க 17 பயிர் விதைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது ஊட்டச்சத்து பிரசாரத்தில் முக்கியமான நடவடிக்கை எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

கரோனா தொற்று காரணமாக, இந்தியாவில் பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என உலகம் முழுவதம் உள்ள நிபுணர்கள் கவலையடைந்தனர் என்றும், ஆனால், பஞ்சம் மற்றும் ஊட்டசத்து குறைபாட்டை போக்க, கடந்த 7 முதல் 8 மாதங்களில், இந்தியா 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கியது என்றும், பிரதமர் கூறினார். உணவு பாதுகாப்புக்கு இந்தியா உறுதியளித்துள்ளதால், ரேசனில், பருப்புடன் அரிசி அல்லது கோதுமையை சேர்க்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது என பிரதமர் கூறினார்.

2014ம் ஆண்டு வரை உணவு பாதுாப்பு சட்டம், 11 மாநிலங்களில் மட்டும் இருந்ததாகவும், அதன்பின்பே இது நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். உலகமே கரோனாவுக்கு எதிராக பேராடிக் கொண்டிருக்கும்போது, இந்திய விவசாயிகள் நெல், கோதுமை, பருப்பு போன்ற உணவு தானியங்களின் உற்பத்தியில் சாதனை படைத்ததாக அவர் கூறினார். இந்தியாவில் சீர்திருத்தங்கள் தொடர்ந்து செய்யப்படுவதாகவும், இது உலக உணவு பாதுகாப்புக்கு இந்தியாவின் உறுதியை காட்டுகிறது எனவும் பிரதமர் கூறினார். விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட விவசாய சீர்திருத்தங்களை அவர் பட்டியலிட்டார். வேளாண் உற்பத்தி சந்தைக் குழு(ஏபிஎம்சி) சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் நோக்கம், அதிக போட்டியை உருவாக்குவது என பிரதமர் கூறினார். உற்பத்தி விலையை விட, ஒன்றடை மடங்கு கூடுதலாக குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அரசு கொள்முதல் ஆகியவை நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிமான நடவடிக்கை என்பதால், அது தொடரும் என பிரதமர் கூறினார்.

சிறு விவசாயிகளுக்கு பலம் அளிக்க, நாட்டில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டன என பிரதமர் கூறினார். உணவு தானியங்கள் இந்தியாவில் வீணடிக்கப்படுவது, முக்கிய பிரச்னையாக உள்ளது எனவும், இந்த நிலையை மாற்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் கூறினார். கிராமங்களில் சிறந்த கட்டமைப்புகளை உருவாக்க, தற்போது அரசும், தனியார் அமைப்பினருக்கு சிறந்த வாயப்புகள் ஏற்படும்.

ஏபிஎம்சி சட்டத்தின் திருத்தம் குறித்து விவரித்த பிரதமர், தனியார் நிறுவனத்துடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்யும்போது, உற்பத்தி பொருளின் விலை, விளைவிக்கும் முன்பே தீர்மானிக்கப்படும் என பிரதமர் கூறினார். இது விவசாய உற்பத்தி பொருளின் விலையில் ஏற்றத் தாழ்வு ஏற்படும் பிரச்னையை தீர்க்கும் எனவும், விவசாய துறையில் புதிய தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் எனவும் பிரதமர் கூறினார். விவசாயிகளுக்கு பல வாய்ப்புகளை அளிப்பதோடு, சட்ட பாதுகாப்பும் கிடைக்கும் என அவர் தெரிவித்தார். ஒப்பத்தத்தை ரத்து செய்ய விவசாயி விரும்பினால், அவர் அபராதம் செலுத்த தேவையில்லை, ஆனால், தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்ய விரும்பினால், அது அபராதம் செலுத்த வேண்டும். உற்பத்தி பொரும் மீதுதான் ஒப்பந்தம் இருக்கும். வேறு எந்தவிதமான நெருக்கடியும் விவசாயிக்கு ஏற்படாது என அவர் கூறினார். இந்த சீர்திருத்தங்களால், விவசாயிக்கு அனைத்துவித பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

இந்திய விவசாயிகள் வலுவடையும் போது, அவர்கள் வருமானம் அதிகரிக்கும், அது போல, ஊட்டசத்து குறைபாடுக்கு எதிரான பிரசாரமும் சம அளவிலான பலத்தை பெறும். இந்தியா மற்றும் எப்ஏஓ இடையிலான ஒத்துழைப்பு அதிகரிப்பது, இப்பிரசாரத்துக்கு மேலும் வலு சேர்க்கும் என பிரதமர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x