Published : 16 Oct 2020 04:52 PM
Last Updated : 16 Oct 2020 04:52 PM

பிரதமர் மோடி மீது எனக்கு கண்மூடித்தனமான பக்தி இருக்கிறது, என்னையும் பிரதமரையும் பாஜகவையும் பிரிக்க முடியாது: சிராக் பாஸ்வான் திட்டவட்டம்

பிஹார் அரசியலில் புயலைக் கிளப்பி வரும் லோக்ஜனசக்தி கட்சியின் மறைந்த தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தன் தந்தை இறந்த துக்கத்திலிருந்து மீண்டு தேர்தல் களத்துக்கு திரும்பியுள்ளார்.

பாஜக தலைமை லோக் ஜனசக்தி கட்சி ஆட்சியை எதிர்நோக்குவதாகவும் ஐக்கிய ஜனதாதளம் வெளியேற வேண்டியதுதான் என்று ராம்விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மோடி பற்றியும் பாஜகவுடனான தன் உறவு பற்றியும் கூறியதாவது,

“மாநில அரசியல் என் கவனம், என் தந்தை தேசிய அரசியலில் ஈடுபட்டவர். என்னுடைய குறுகிய அரசியல் வாழ்வில் நான் என்ன பார்த்தேன் என்றால் பிஹாரில் அளவுக்கதிகமாக சாதி அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தலித்துகளை மகாதலித்துகளாக்கும் இந்த அரசியலில் என்ன இருக்கிறது? என்ன அரசியல் இது? வறுமைதான் இங்கு ஒரே சாதி. பட்டியல் வகுப்பினரின் தனிநபர் வருவாயைப் பெருக்குவதுதான் நல்ல பணியாக இருக்க முடியும். ஒட்டுமொத்த வளர்ச்சிக்குறியீட்டிலும் கவனம் உள்ளது...

நான் எப்போதும் பிஹாரின் 12 கோடி மக்களைப் பற்றியே சிந்திக்கிறேன், ஆனால் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து ஊக்கம் பெறுகிறேன். 2014 மக்களவை தேர்தலின் போது மோடி மட்டுமே நாட்டின் 125 கோடி மக்களுக்காகவும் பேசினார். அவர்தான் என் ஆதர்சம்...

எனக்கு பிரதமர் மீது கண்மூடித்தனமான பக்தி உள்ளது. என்னையும் பிரதமர் மோடியையும் பாஜகவையும் பிரிக்க முடியாது. பிரதமரிடமிருந்து என்னை தனித்துப் பிரிக்க முடியாது. பிஹாரில் இரட்டை இன்ஜின் அரசு வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் பாஜக தலைமை அரசுதான்.

தேஜஸ்வி குறித்து எனக்கு கவலையில்லை அவர் வேலையை அவர் செய்கிறார். என் முழு கவனமும் இப்போதைய முதல்வர் மீதுதான் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகக் கூடாது” - இவ்வாறு கூறினார் சிராக் பாஸ்வான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x