நாட்டை பாதுகாப்பதில் என்எஸ்ஜி வீரர்களின் முயற்சி; இந்தியா பெருமிதம் கொள்கிறது: பிரதமர் மோடி பாராட்டு

நாட்டை பாதுகாப்பதில் என்எஸ்ஜி வீரர்களின் முயற்சி; இந்தியா பெருமிதம் கொள்கிறது: பிரதமர் மோடி பாராட்டு
Updated on
1 min read

என்எஸ்ஜி அமைப்பு தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நாட்டை பாதுகாப்பதில் என்எஸ்ஜி எடுக்கும் முயற்சிகளை கண்டு இந்தியா பெருமை அடைவதாக கூறியுள்ளார்.

என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்பு வீரர் படையின் அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி என்எஸ்ஜி கருப்பு பூனை படையின் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில், “என்எஸ்ஜி தினத்தை முன்னிட்டு, என்எஸ்ஜி கருப்பு பூனை படையின் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பாதுகாப்பு அமைப்பில் என்எஸ்ஜி முக்கிய பங்கை ஆற்றுகிறது. அதீத துணிச்சல் மற்றும் செயல்திறனுடன் அது விளங்குகிறது. நாட்டை பாதுகாப்பதில் என்எஸ்ஜி எடுக்கும் முயற்சிகளை கண்டு இந்தியா பெருமை அடைகிறது," என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in