Published : 16 Oct 2020 08:10 AM
Last Updated : 16 Oct 2020 08:10 AM

நம்பகமான செய்திகளை தருவதில் அச்சு ஊடகங்கள் முதலிடம்: சி-வோட்டர் ஆய்வில் 66 சதவீத இந்தியர்கள் கருத்து

புதுடெல்லி

நம்பகமான செய்திகளை வழங்குவதில் அச்சு ஊடகங்கள் முதலிடம் வகிப்பதாக 66 சதவீத இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக காட்சி ஊடகங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. உள்ளூர் முதல் சர்வ
தேச அளவிலான செய்திகளை உடனுக்குடன் வீட்டுக்கு கொண்டு வந்துவிடுவதால், 24மணி நேர செய்தி தொலைக்காட்
சிகளுக்கு மக்கள் மத்தியில்பெரும் வரவேற்பு இருப்பதாகக்கூறப்படுகிறது. இந்நிலையில்,மக்கள் அதிகம் சார்ந்திருப்பது
காட்சி ஊடகங்களா அல்லதுஅச்சு ஊடகங்களா என்ற தலைப்பில் ‘சி-வோட்டர்’ சார்பில் நாடுமுழுவதும் ஒர் ஆய்வு நடத்தப்
பட்டது. அதன்விவரம்:

பெரும்பாலான இந்தியர்கள் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் செய்திகளையும், அச்சு ஊடகங்களில் வரும் செய்திகளையும் பார்ப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால், அவர்களில் 66 சதவீதம் பேர், நம்பகமான செய்திகளை தருவதில் அச்சு ஊடகங்களே முதலிடம் வகிப்பதாக அறுதியிட்டுக் கூறுகின்றனர். குறிப்பாக, தற்போதைய கரோனா காலகட்டத்தில், அச்சு ஊடகங்களில் வரும் செய்திகள் மிகப் பயனுள்ளதாக இருப்பதாகவும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளதாகவும் 63 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அனைத்து செய்திகளையும் விரிவாகவும் ஆழமாகவும் தருவதால் செய்தித்தாள்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக 75 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

காட்சி ஊடகங்கள் எந்தவொரு விஷயத்தையும் பரபரப்பாக்குவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருப்பதாக இந்தியர்களில் பெரும் பகுதியினர் கூறுகின்றனர். ஆனால், அச்சு ஊடகங்கள் அவ்வாறு இல்லாமல், செய்திகளுக்கும் ஆழமான அலசல்களுக்குமே முக்கியத்துவம் கொடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, காட்சி ஊடகங்களில் வரும் கூச்சல் மிகுந்த விவாத நிகழ்ச்சிகளின் மூலம் எந்தப் பயனுள்ள தகவலையும் பெற முடியவில்லை என 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் பல சுவாரசியமான தகவல்களும் கிடைத்திருக்கின்றன. அதாவது, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினாலும்கூட, அதுதொடர்பான கூடுதல் தகவல்களை அடுத்த நாள் செய்தித்
தாள்களில் படித்தால்தான் முழு திருப்தி ஏற்படுவதாக 52 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, காட்சிஊடகங்களைவிட அச்சு ஊடகங்களில் வரும் விளம்பரங்களே மக்களை அதிக அளவில் கவர்வதும் தெரியவந்துள்ளது. 63 சதவீதம் பேர், அச்சு ஊடகங்களில் வெளியாகும் விளம்பரத் தகவல்களே தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக கூறியிருக்கின்றனர்.

இ-செய்தித்தாள்களுக்கு..

இந்நிலையில், அச்சு ஊடகங்களை இணையதளங்களில் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 71 கோடி பேர் இணையதளத்திலும், 51 கோடி பேர் ஸ்மார்ட்போன்களிலும் தங்களுக்கு விருப்பமான செய்தித் தாள்களை படித்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x