கனமழை மற்றும் வெள்ளம்: தெலங்கானா, ஆந்திர பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

கனமழை மற்றும் வெள்ளம்: தெலங்கானா, ஆந்திர பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
Updated on
1 min read

கனமழை காரணமாக தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இது குறித்து அவர் டிவிட்டரில் விடுத்துள்ள பதிவில், ‘‘ தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் கனமழை நிலவரம் குறித்து @TelanganaCMO KCR மற்றும் AP CM @ysjagan ஆகியோருடன் பேசினேன். மீட்பு மற்றும் நிவாரண பணியில் மத்திய அரசு முடிந்தளவு உதவி அளிக்கும் என உறுதியளித்தேன். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றியே என் எண்ணங்கள் உள்ளன’’ என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in