குடும்ப வன்முறை வழக்கில் சோம்நாத் பாரதிக்கு முன்ஜாமீன் மறுப்பு

குடும்ப வன்முறை வழக்கில் சோம்நாத் பாரதிக்கு முன்ஜாமீன் மறுப்பு
Updated on
1 min read

குடும்ப வன்முறை வழக்கில் டெல்லியின் முன்னாள் சட்ட அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவுமான சோம்நாத் பாரதிக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.

சோம்நாத் பாரதி மீது அவது மனைவி லிபிகா மித்ரா கடந்த ஜூன் 10-ம் தேதி டெல்லி காவல் துறையிடம் புகார் அளித்தார். அதில், சோம்நாத் பாரதி 2010-ம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொண்டது முதல் தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வருவதாகவும் ஒருமுறை கொல்ல முயன்றதாகவும் கூறியிருந்தார்.

சோம்நாத் பாரதி லிபிகா இடையே சமாதானம் செய்யும் முயற்சிகள் தோல்வி அடைந்ததால், மேற்கு டெல்லியின் துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் சோம்நாத் பாரதி மீது கடந்த புதன் கிழமை வழக்கு பதிவு செய்யப் பட்டது. குடும்ப வன்முறை, கொலை முயற்சி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் விசாரணைக்கு வருமாறு சோம்நாத் பாரதிக்கு போலீஸார் சம்மன் அனுப்பி யுள்ளனர். ஆனால் போலீஸ் விசாரணையை அவர் தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் இவ்வழக்கில், தான் கைது செய்யப்படுவதை தவிர்க்க முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் திருந்தார். இம்மனுவை நீதிமன்றம் நேற்று நிராகரித்துவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in