Last Updated : 14 Oct, 2020 03:40 PM

 

Published : 14 Oct 2020 03:40 PM
Last Updated : 14 Oct 2020 03:40 PM

துர்கா பூஜையின்போது நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்பு: ரூ.1500க்கு கோவிட் பரிசோதனை; மேற்கு வங்க அரசின் முடிவுக்கு தனியர் மருத்துவமனைகள் வரவேற்பு

துர்கா பூஜையின்போது நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ரூ.1500க்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற மேற்கு வங்க அரசின் முடிவை தனியர் மருத்துவமனைகள் வரவேற்றுள்ளன. அதேநேரம் கோவிட் 19 பரிசோதனை கருவிகள் வாங்குவதில் விதிக்கப்படும் ஜிஎஸ்டியை குறைக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.

வரவிருக்கும் வாரங்களில் துர்கா பூஜா திருவிழாக்களின்போது, தொற்றுநோய் அதிகரிக்க வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனைகளில் கோவிட் 19 பரிசோதனைகளின் கட்டண வீதத்தை 2,250 முதல், 1,500 வரை மாநில அமைச்சரவை திங்கள்கிழமை குறைக்க வலியுறுத்தியது.

மேற்கு வங்க மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம், மாநில அரசாங்கத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து, கோவிட் 19 நோயாளிகளை அழைத்துச் செல்லப்பட வேண்டிய போக்குவரத்துக்கு தூரத்தை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் கட்டணமாக ₹ 3,000 நிர்ணயித்தது.

மாநில அரசு எடுத்த முடிவை இந்த முடிவை கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் வரவேற்றுள்ளன. அதேநேரம் பரிசோதனைக் கருவிகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏஎம்ம்ஆர்ஐ மருத்துவமனை

ஏஎம்ம்ஆர்ஐ மருத்துவமனைகளின் குழு தலைமை நிர்வாக அதிகாரி ரூபக் பாருவா பிடிஐயிடம் கூறியதாவது:

"கோவிட் சோதனைக்கான செலவை மாநில அரசு,1,500 ஆகக் கட்டுப்படுத்துவதால், இவை நோய்தொற்று காலமாக இருப்பதால், நிச்சயம் இந்த உத்தரவின் படி நாங்கள் செயல்படுவோம். இருப்பினும், விகிதத்தை மறுபரிசீலனை செய்ய எங்கள் கோரிக்கையை அரசாங்கத்தின் முன் முன்வைக்க விரும்புகிறோம். இது எங்களுக்கு நிதி ரீதியாக சாத்தியமில்லை எனினும் இவை நோய்தொற்று காலமாக இருப்பதால், நிச்சயம் இந்த உத்தரவின் படி நாங்கள் செயல்படுவோம்.

மறுஉருவாக்கம், சோதனை கருவி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் செலவை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் இது ஒரு சுமைதான். எனினும் பரிசோதனைக் கருவிகளின் ஜிஎஸ்டியையாவது மாநில அரசு குறைக்கவேண்டும். தனியார் மருத்துவமனைகள் லாபமீட்டும் நிறுவனங்கள் என்ற நம்பிக்கைக்கு மாறாக, தனியார் மருத்துவமனைகள் கடந்த எட்டு மாதங்களாக இழப்பை சந்தித்து வருகின்றன, இது எங்கள் நிலையை மேலும் பாதிக்கும்.''

பிர்லெஸ் மருத்துவமனை

பிர்லெஸ் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி சுதீப்தா மித்ரா கூறுகையில், ​​"மாநில அரசு முடிவு செய்ததை நாங்கள் நிச்சயமாகப் பின்பற்றுவோம். இது எங்கள் சமூகப் பொறுப்பு., மனிதாபிமான அடிப்படையில் அரசின் முடிவை பின்பற்றுவோம். ஆனால் பிபிஇ கிட்களுக்கு செய்யப்பட்டதைப் போலவே கோவிட் -19 சோதனைகளை நடத்துவதற்குத் தேவையான கருவிகளில் ஜிஎஸ்டியைக் குறைக்க வேண்டும். இதனை ஒரு கோரிக்கையாக அரசாங்கத்திடம் நாங்கள் கேட்டுள்ளோம்."

அப்போலோ மருத்துவமனை

அப்போலோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் சியாமாசிஸ் பாண்டியோபாத்யாய் கூறுகையில், ''அரசின் முடிவை வரவேற்கிறோம். தற்போது ஏற்பட்டுவரும் கோவிட் 19 தொற்றுநோய் பாதிப்புகளால் இது சமூகத்தின் மீதான தங்கள் பொறுப்பாக அனைவரும் கருத வேண்டும். மாநில அரசு எடுத்துவரும் இந்த முயற்சிகள் குறித்து எந்தவொரு சர்ச்சையையும் உருவாக்க விருப்பமில்லை. இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒரே நேரத்தில் மக்கள் சுகாதார நெறிமுறையை பின்பற்ற வேண்டும். நோயைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x