மெஹபூபா முப்தி தடுப்புக் காவலில் இருந்து விடுதலை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித்தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி 13 மாதங்களுக்குப் பிறகு தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. எனவே, அசம்பாவிதச் சம் பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. பிரிவினைவாதத் தலைவர் கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, அம்மாநில முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி, முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி மூத்த தலைவருமான ஒமர் அப்துல்லா ஆகியோர் தடுப்புக் காவலில் வைக் கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து பெரும்பாலான தலைவர்கள் ஓராண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த சூழலில் மெஹபூபாமுப்தி விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வந்தார். அவர் மீது பொது பாதுகாப்புச் சட்டமும் பாய்ந்தது. மெஹபூபா முப்தியை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் 13 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மெஹபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in