புதிதாக கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71,75,880 

புதிதாக கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71,75,880 
Updated on
1 min read

கரோனா வைரஸுக்கு கடந்த 24 மணி நேரத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 60,000த்திற்கும் கீழ் குறைந்து 55,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 71 லட்சத்து 75 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து நலமடைந்தோர் எண்ணிக்கை 62 லட்சத்தைக் கடந்தது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை 706, இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 856 ஆக உள்ளது.

தொடர்ந்து 5வது நாளாக கரோனாவுக்காக சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது.

அதே போல் தொடர்ச்சியாக 5வது நாளாக தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 75,000த்திற்கும் குறைவாக உள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து 10வது நாளாக ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேதியன்று இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேர் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு படிப்படியாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தற்போது நாட்டில் 8 லட்சத்து 38 ஆயிரத்து 729 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 11.69% ஆகும்.

பலி விகிதமும் 1.53% ஆக உள்ளது.

ஐசிஎம்ஆர் தகவல்களின் படி மொத்தமாக இதுவரை 8 கோடியே 89 லட்சத்து 45 ஆயிரத்து 107 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டன. அக்டோபர் 12ம் தேதி மட்டும் 10 லட்சத்து 73 ஆயிரத்து 14 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in