

2024-ம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவதை உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தூய்மையான மற்றும் பாதுகாப்பான தண்ணீரின் விநியோகம் பொது மக்களின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியம் என்பதால் தண்ணீர் விநியோகம் மற்றும் அதன் தொடர் பரிசோதனை இன்றியமையததாதகிறது.
2024-ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்வதை ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.
தண்ணீர் பரிசோதனைக்கான அவசியத்தை கருத்தில் கொண்டு, நவீன நடமாடும் தண்ணீர் பரிசோதனை ஆய்வகம் என்னும் புதுமையான முயற்சியை ஹரியாணா அரசு முன்னெடுத்துள்ளது.
தண்ணீர் பரிசோதனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த நவீன நடமாடும் தண்ணீர் பரிசோதனை ஆய்வகத்தில் ஜிபிஎஸ் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் நீண்டகாலத்துக்கு தொடர்ந்து போதுமான அளவிலும், பரிந்துரைக்கப்பட்ட தரத்திலும் குடி
தண்ணீரை உறுதியாக வழங்குவதற்கு ஜல் ஜீவன் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இயக்கத்தின் கீழ் தரமான குடி தண்ணீரை மக்களுக்கு வழங்க ஹரியாணா அரசு முழுவதும் உறுதி பூண்டுள்ளது.