

மறைந்த பாஜக மூத்த தலைவர் விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் மதிப்பிலான நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று வெளியிட்டார்.
குவாலியரின் ராணி என்று அழைக்கப்படுபவர் விஜய ராஜே சிந்தியா. அவரது நூற்றாண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு இந்த நாணயம் வெளியிடப்பட்டது. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், பிரத்யேகமான நாணயத்தை நிதி அமைச்சகம் தயார் செய்தது.
விஜய ராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் மதிப்பிலான நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று வெளியிட்டார்.
பல்வேறு நாடுகளில் உள்ள சிந்தியாவின் உறவினர்கள் மற்றும் பெருமக்கள் காணொலிக் காட்சி வாயிலாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.