குஜராத் கோயிலில் தயாரிக்கப்பட்ட 11,111 கிலோ மெகா லட்டு: கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை

குஜராத் கோயிலில் தயாரிக்கப்பட்ட 11,111 கிலோ மெகா லட்டு: கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை
Updated on
1 min read

குஜராத் மாநிலம் அம்பாஜி கோயிலில் 11 ஆயிரத்து 111 கிலோ எடையுள்ள மெகா லட்டு பிரசாத மாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசூரி அம்பாஜி மாதா தேவஸ்தான தலைவர் கூறியது: இந்த பிரம் மாண்ட லட்டு தயாரிக்க 33 மணி நேரம் ஆனது. 2,600 கிலோ நெய், 2,650 கிலோ கடலை மாவு, 5,500 கிலோ சர்க்கரை பயன்படுத்தி ரூ.17 லட்சத்தில் இந்த லட்டு தயாரிக்கப்பட்டது. இதனை கோயிலுக்கு வரும் 3 லட்சம் பக்தர்களுக்கு பகிர்ந்து வழங்க இருக்கிறோம். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவும் இந்த லட்டை பரிந்துரைத்துள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in