Published : 11 Oct 2020 08:27 AM
Last Updated : 11 Oct 2020 08:27 AM

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சந்தேகப்படும் வகையில் பாக். தீவிரவாதிகள் நடமாட்டம்: ஏகே-74 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுப்பு

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடுபகுதியில் (எல்ஓசி) சந்தேகத்துக் குரிய வகையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தை ஒட்டி கெரன்பகுதியில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இருந்து ஏராளமான ஏகே-74 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஆயுதங்களை ராணுவத்தினர் நேற்று கண்டெடுத்தனர்.

இதுகுறித்து ஸ்ரீநகர் ராணுவமுகாமைச் சேர்ந்த சினார் படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ராஜு கூறியதாவது: கெரன் பகுதியானது எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கிருந்துதான் ஏராளமான ஆயுதங்களை கண்டெடுத்துள்ளோம். ஆயுதங்களை இந்திய எல்லைப்பகுதிக்குள் கடத்தி சதி வேலைசெய்ய பாகிஸ்தான் தீவிரவாதி கள் திட்டமிட்டிருந்தனர்.

கிஷண்கங்கா ஆறு வழியாக3 பேர் கொண்ட கும்பல் கயிற் றைக் கட்டி அதில் டியூப் மூலம் ஆயுதங்களை இடமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்று அவர்களின் சதி வேலையை முறியடித்தனர். எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதை அறிந்துள்ளோம்.இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றி ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள் ளோம். அங்கிருந்து ஏகே 74 ரக துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், வெடிபொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். தீவிரவாதிகளின் ஊடுருவும் முயற்சியை தொடர்ந்து தடுத்து வரு
கிறோம். இதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பை ஏற்படுத்தியுள் ளோம்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடமாட்டம் அடிக்கடி உள்ளதாக தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. எனவே, தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என்பதைக் கண்காணிக்க அங்கு நமது ராணுவ கண்காணிப்பு பிரிவினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அங்கு கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் விழிப்புடன் உள்ளோம். தீவிரவாதிகளை எல்லை வழியாக ஊடுருவ பாகிஸ்தான் செய்யும் முயற் சிகள் அனைத்தையும் தடுத்து நிறுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x