‘இந்து நாடு’ என்ற கருத்து எடுபடாமல் போவது ஏன்?

‘இந்து நாடு’ என்ற கருத்து எடுபடாமல் போவது ஏன்?
Updated on
2 min read

எந்த ஒரு மதச் சார்புள்ள நாட்டையும் ‘விலக்கி வைத்தல் கொள்கை’ ஒன்றின் மூலம் உருவாக்கி விடலாம். இஸ்லாமிய நாடுகளைப் பொறுத்த வரையில், குற்றங்களுக்காக ஷரியத் சட்டங்களின் மூலம் வழங்கப்படும் தண்டனை மதச்சார்புள்ள நாட்டின் ஒரு முகமாக உள்ளது. சிறைச்சாலைகள் இல்லாத காலத்தில் உடலை துன்புறுத்தும் தண்டனைகள் வழங்கப்பட்டன. குற்றவாளிகளை அடிப்பது, அவர்களின் உடல் உறுப்புகளை துண்டிப்பது, கல்லால் அடிப்பது, தலை துண்டிப்பது போன்ற தண்டனைகள் இன்று காட்டுமிராண்டித்தனமாக இருக்கலாம். ஆனால், 7-ம் நூற்றாண்டு வரை இந்த வகையான தண்டனைகள்தான் நடைமுறையில் இருந்தன.

மதச்சார்புள்ள நாட்டின் மற்றொரு முகம் ‘விலக்கி வைத்தல்’. பாகிஸ்தானில் சட்டப்படி கிறிஸ்தவர் பிரதமராக முடியாது. சீக்கியர் அதிபராக முடியாது. சிறுபான்மையினரை இப்படி விலக்கி வைப்பதன் மூலம் மதச்சார்புள்ள நாடு என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. பாகிஸ்தானின் அரசியல் சட்டதிட்டங்களை லியாகத் அலிகான் வகுக்கும்போது இந்த நிலை இல்லை. ஆனால், அயூப் கான், ஜுல்பிகர் அலி புட்டோ மூலம் இந்த ‘விலக்கல்’ கொள்கை அடிப்படையாகக் கொண்டு வரப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில் அரசியலமைப்பு சட்டத்தில் ‘இந்து நாடு’ என்று திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர். விஷ்ணுவின் மறு அவதாரமாக தங்கள் மன்னர்களை பெரும்பாலான நேபாளிகள் நம்புகின்றனர். அவர்கள்தான் மன்னராட்சிக்கு ஆதரவளிக்கின்றனர். ஆனால், சட்டப்படி இன்று நேபாளம் மதச்சார்பற்ற நாடாகி விட்டது. ஆனால் மன்னராட்சியை நீக்கும் வரை பல நூற்றாண்டாக நேபாளம் மன்னராட்சியின் கீழ் இந்து நாடாகவே இருந்தது.

‘இந்து நாடு’ என்ற கோரிக்கையை இந்தியாவிலும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக.வினர் பேசி வருகின்றனர். இந்து நாடு என்ற கருத்து குறித்து கடந்த ஆண்டு நான் எழுதி இருந்தேன். அதில், ‘‘கடந்த 2008-ம் ஆண்டு வரை இந்த பூமியிலேயே நேபாளம் மட்டும்தான் இந்து நாடாக இருந்தது. நேபாளம் 2008-ம் ஆண்டு ஜனநாயக குடியரசான பின்னர் ஷத்திரியர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்து நாடு என்று நேபாளத்தை கூறியது ஏன்? அதற்கு காரணம், இந்துக்களின் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளபடி மன்னரிடம் இருந்து கட்டளைகள் வரும். ஆனால், நேபாளம் இந்து நாடு என்ற அளவில் மட்டும்தான் இருந்தது. அதற்கும் மனுஸ்மிருதிக்கும் சம்பந்தமில்லை. ஏனெனில் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள பல விஷயங்கள் மனித உரிமைகளுக்கு எதிரானவை’’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்து ராஜ்ஜியம் என்பது ஆர்எஸ்எஸ்.ஐ பொறுத்த வரையில் அது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை விலக்கி வைப்பது. நேபாளத்தில் அதை உள்ளடக்கியது. அதன் நோக்கம் எல்லாம் ஷத்திரிய மன்னராட்சி என்பதுதான். அதனால்தான் அது இந்து நாடாக இருந்தது. மனுஸ்மிருதியில் கூட சாதிகளின் நிலை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஷத்திரியர்கள் ஆட்சி புரிய வேண்டும், பிராமணர்கள் கற்பிக்க வேண்டும், வைசியர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும், சூத்திரர்கள் பணிபுரிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சாதிகள் எல்லை மீறக் கூடாது. ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம் செலுத்தக் கூடாது. இதுதான் உண்மையான ‘இந்து ராஜ்ஜியம்’ என்று நமது நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட இந்துக்கள் பணம், கல்வி, அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர். இஸ்லாமிய நாடு முஸ்லிம் அல்லாதவர்களை விலக்கி வைக்கிறது. இந்து ராஜ்ஜியம் முதலில் இந்துக்கள் அல்லாதவர்களை விலக்கி வைக்கிறது. அதன்பின், இந்துக்களிலேயே ஒரு வகுப்பை பிரித்து வைக்கிறது. இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் என்ற கருத்து எடுபடாமல் போவதற்கு இது ஒன்றுதான் காரணம்.

ஆர்எஸ்எஸ் மட்டும் இந்து ராஜ்ஜியம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு என்ன அர்த்தம் என்று விளக்கம் அளிக்கவில்லை. அதற்கு விளக்கம் அளிக்க முடியாது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை மறந்து விடுங்கள். இந்து ராஜ்ஜியம் என்பதற்கு ஏதாவது விளக்கம் அளித்தால், அதை பெரும்பாலான இந்துக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

நேபாளத்தில் 601 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் கூட, மன்னராட்சியை ஆதரித்து 21 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இந்தியாவில் ஒருவேளை இந்து நாடு என்பது குறித்து தெளிவான விவரங்கள் சொன்னாலும், அதற்கு ஆதரவு திரட்டுவது முடியாத காரியம். என்னைப் பொறுத்தவரையில், இந்து ராஜ்ஜியத்துக்கு எதிராக சிறப்பான முறையில் விவாதத்தை முன்வைத்தது தலித் சமூக சேவகர் மற்றும் எழுத்தாளர் சந்திரபன் பிரசாத் என்பவர்தான்.

இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் பற்றி சந்திரபன் பிரசாத் சொன்னது, ‘‘பிராமணர்கள் கற்றலுக்கு பொறுப்பு - இந்திய கல்வியின் நிலையைப் பாருங்கள். ஷத்திரியர்களுக்கு பாரத மாதாவை காக்கும் பொறுப்பு - பல நூற்றாண்டுகள் பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தில்தான் இந்தியா இருந்தது. வைசியர்கள் பொருளாதாரத்துக்கு பொறுப்பு - இந்த பூமியில் ஏழை நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே, இந்து ராஜ்ஜியத்தால் இந்தியர்களுக்கு ஒரு பயனும் இல்லை’’ என்பதுதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in