

சைபாஸா கருவூல ஊழல் வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று ஜாமீன் அளித்துள்ளது.
ஆனால் தும்கா கருவூல ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையிலிருந்து வெளியே வர முடியாது என்று தெரிகிறது.
1992-93-ல் சைபஸா கரூவூலத்திலிருந்து ரூ.33.67 கோடியை தன் வீட்டுக்குக் கொண்டு சென்ற வழக்கில் லாலு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் தும்கா கருவூல மோசடி வழக்கில் லாலுவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கருவூலத்திலிருந்து ரூ.3.5 கோடி கையாடல் செய்யப்பட்டதான இந்த வழக்கில் அவர் சிறையிலிருந்து வெளியே வர முடியாது.
கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக 3 வழக்குகள் லாலு மீது பதியப்பட்டது. லாலு நீண்ட கால கிட்னி நோய் உள்ளவர் என்பதாலும் டைப் 2 நீரிழிவு நோய் இருப்பதாலும் லாலு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
பொதுப்பணத்தை ஊழல் செய்ததாக லாலு மீது 6 வழக்குகள் தொடரப்பட்டு, இந்த வழக்குகளிலெல்லாம் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது, 2017-லிருந்து அவர் சிறையில் இருக்கிறார். 3 கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் லாலுவுக்கு 3.5, 5, 14 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டது.