Published : 09 Oct 2020 01:46 PM
Last Updated : 09 Oct 2020 01:46 PM

உடல் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

கண்பார்வை இழத்தல், இதய நோய்கள், நீரிழிவு நோய், புற்று நோய் போன்ற சுகாதார அபாயங்களை முன்கூட்டியே கண்டறியவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்றும் ரெய்ஸ் 2020 மாநாட்டில் பேசிய நிபுணர்கள் தெரிவித்தனர்.

4ம் நாள் ரெய்ஸ் 2020 மாநாடு - ‘சமூக மேம்பாட்டுக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு’ மாநாட்டில் சமூக பிரச்னைகளை தீர்க்க செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை மேம்படுத்துவது, கற்றல் முடிவுகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை ஊக்குவிப்பது, இந்தியாவுக்கான ஒட்டு மொத்த செயற்கை நுண்ணறிவு வாய்ப்பு உட்பட பல விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

முதல் கூட்டத்தில், கூகுள் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் மனீஷ் குப்தா பேசுகையில், ‘‘ சமூக தேவைகளை தீர்க்க செயற்கை நுண்ணறிவின் சுறுசுறுப்பை அதிகளவில் பயன்படுத்துவதுபற்றி பேசினார். வானிலை முன்னறிவுப்புக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதாகவும், வெள்ளம் குறித்த எச்சரிக்கையை இது தெரிவிக்கிறது என்றும் மனீஷ் குப்தா தெரிவித்தார்.

கண்பார்வை இழத்தல், இதய நோய்கள், நீரிழிவு நோய், புற்று நோய் போன்ற சுகாதார அபாயங்களை முன்கூட்டியே கண்டறியவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவின் எல்லை மிகப் பெரியது என்றும், இதன் மூலமான தீர்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மனீஷ் குப்தா கூறினார்.

ஐபிஎம் நிறுவனத்தை சேர்ந்த கவுரவ் சர்மா பேசுகையில், ‘‘ஐ.நாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சி இலக்குகளை அடைய, செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது’’ என்றார். “செயற்கை நுண்ணறிவில் இந்தியாவுக்கு, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன எனவும், உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற, நமது நாடு செயற்கை நுண்ணறிவு தலைமையிலான சமூகத்துக்கு மாற வேண்டும். அதற்காக செயற்கை நுண்ணறிவு அமைப்பை பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதாகவும் உருவாக்க வேண்டும்’’ எனவும் கவுரவ் சர்மா கூறினார்.

செயற்கை நுண்ணறிவு சூழலை மேம்படுத்தியதில், தெலங்கானா அரசின் சாதனைகள் இந்த மாநாட்டில் எடுத்து கூறப்பட்டன. அடுத்த 10 ஆண்டுகளில், ஐதராபாத்தை உலகின் முதல் 25 செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு மையங்களில் ஒன்றாக மாற்ற, தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியை ஊக்குவிக்க, தெலங்கானா அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஐடிஇசி துறை முதன்மை செயலாளர் திரு. ஜெயேஷ் ரஞ்சன் விளக்கினார்.

ஐபிஎம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆப் இயக்குனர் சாலினி கபூர் பேசுகையில், ‘‘தனிப்பட்ட கல்விக்கும் அதே நேரத்தில் முறையான கல்விக்கான கட்டமைப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x