சர்வதேச அளவில் தேசிய நலன்களை மேம்படுத்தியவர்கள்: வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு மோடி பாராட்டு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

இந்திய வெளியுறவு அதிகாரிகள் சர்வதேச அளவில் தேசிய நலன்களை மேம்படுத்தியவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

ஐ.எஃப்.எஸ் தினமான இன்று (அக்டோபர் 9) இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தேசத்திற்குச் சேவை செய்யும் அவர்களது பணிகள் பாராட்டத்தக்கவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்ப் பரவலின்போது சர்வதேசப் பயணங்கள் நிறுத்தப்பட்டன; இதனால் வெளிநாட்டிலிருந்து இந்தியர்களை உள்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக தொடங்கப்பட்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்தின்போது ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. மேலும், நமது குடிமக்களுக்கும் பிற நாடுகளுக்கும் இது தொடர்பாக அவர்கள் செய்த பிற உதவிகள் குறிப்பிடத்தக்கவை என்று மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

''ஐஎஃப்எஸ் நாளில், அனைத்து #IndianForeignService அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள். அவர்கள் பணிகள் #ServingTheNation நோக்கியே இருந்தது. மேலும், அவர்கள் தங்கள் பணிகள் மூலம் சர்வதேச அளவில் தேசிய நலன்களை மேம்படுத்துவது பாராட்டத்தக்கது. வந்தே பாரத் மிஷன் மற்றும் கோவிட் தொடர்பான பிற உதவிகளின்போது நமது குடிமக்களுக்கும் மற்றும் பிற நாடுகளுக்கும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in